டாஸ்மாக் பார், திரையரங்குகள் மூடக் கோரி வழக்கு..!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க டாஸ்மாக் பார் மூட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 21-ம் தேதி நிலவரப்படி 47 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த பிப்ரவரிக்கு பின் கொரோனா நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால், பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க டாஸ்மாக் பார், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள் மூட அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025