காணொளி மூலம் அனைத்துக்கட்சி கூட்டம்! முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கடிதம்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இதனை குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை காணொளி காட்சி மூலம் நடத்த வேண்டும். அதன் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும்.’ என குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025