காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் வராது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் உறுதியளித்துள்ளார்.
கர்நாடகாவின் மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு, தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து,இது தொடர்பாக,தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்றுள்ள நிலையில்,இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்து பேசினர்.
இந்நிலையில்,மத்திய அமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய அனைத்துக் கட்சிக் குழுவினர், “காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது.மேலும்,கர்நாடக அரசுக்கு அணையை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை” என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…