காவேரி நதிநீர் பங்கீடு விவகாரம்.! டெல்லியில் மத்திய அமைச்சரை சந்திக்கிறர் அமைச்சர் துரைமுருகன்.!

காவேரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறர் அமைச்சர் துரைமுருகன்.
காவிரி நதியில் இருந்து இந்த மாதம் (ஜூலை) கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கடந்த மாதம் குறைவாக தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து ஆலோசிக்கவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மாலை டெல்லி புறப்பட்டார்.
அங்கு காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பாய அதிகாரிகளை நேரில் சந்தித்து காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவாகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளார். மேலும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் அவர்களையும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஜூன் மாதம் 9 டிஎம்சி தண்ணீர் தரவேண்டிய நிலையில் கர்நாடக அரசு காவிரி நதி மூலமாக 2.8 டிஎம்சி தண்ணீர் தான் திறந்துவிட்டது. மீதமுள்ள தண்ணீர் வரவில்லை. இதனால் மேட்டூர் அணையில் தண்ணீர் அளவு குறைந்து உள்ளது. இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு இருக்கும் என கூறப்படுகிறது. ஆதலால் விரைவில் தண்ணீர் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகத்தான் இன்று இந்த சந்திப்பு டெல்லியில் நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025