100 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, 100 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் ஆண்டு விழாவாக இந்த ஆண்டு பல்வேறு நலத்திட்டங்கள், புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 15-ஆம் தேதி, மதுரையில் பிரமாண்டமான கலைஞர் நினைவு நூலகம் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று திருப்பத்தூரில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, 100 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார். முன்னதாக கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின், திமுக கோடியை ஏற்றி வைத்தார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன் வாழ்நாள் எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்திட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டக்கழகம் சார்பில் ஆம்பூர் நகரத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கழகத்தின் இருவண்ணக்கொடியை ஏற்றி வைத்தோம்.
இந்த நிகழ்வில் மாவட்டக்கழகம் சார்பில் ரூ.10 ஆயிரம் நிதியை இளைஞர் அணி அறக்கட்டளைக்கு வழங்கியதற்கு என் அன்பும், நன்றியும். உயர பறக்கும் கருப்பு – சிவப்பு கொடியை போல முத்தமிழறிஞரின் சாதனைகளை உயர்த்தி பிடித்து மக்களிடம் கொண்டு சேர்த்திடுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
தன் வாழ்நாள் எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்திட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டக்கழகம் சார்பில் ஆம்பூர் நகரத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கழகத்தின் இருவண்ணக்கொடியை ஏற்றி வைத்தோம். இந்த நிகழ்வில் மாவட்டக்கழகம் சார்பில்… pic.twitter.com/FFzqwpKCrZ
— Udhay (@Udhaystalin) July 17, 2023