மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்புகளை பார்த்து வந்த மகேந்திரனுக்கு கமல்ஹாசன் துணைத்தலைவர் பதவியை வழங்கினார். சிங்கநல்லூர் தொகுதியில் மகேந்திரன் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்தது.
இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். அப்போது, மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்திருந்தார்.
மேலும், அக்கட்சியின் மீதும், கமல்ஹாசன் மீதும் மகேந்திரன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து, விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் மகேந்திரனை துரோகி என விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன்பின் இவர்கள் இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகமானது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் நாளை மாலை 5 மணிக்கு திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் திமுகவின் பலத்தை அதிகரிக்க மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்வை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…