,

மக்களவை தேர்தல் வெற்றிக்கு மோடியும்.. எங்க டாடியும் காரணம்.! உதயநிதி ஸ்டாலின்.!

By

  • சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம்  திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது.
  • இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய , உதயநிதி ஸ்டாலின் மக்களவை தேர்தலில் திமுக வெற்றிக்கு இரண்டு பேர் மட்டுமே காரணம். ஒன்று மோடி , இன்னொன்று எங்க டாடி என கூறினார்.

சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம்  திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய உதய நிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு நடந்து முடிந்த  மக்களவை தேர்தலில் நான் பிரச்சாரம் செய்ததால் தான் 100 சதவீத வெற்றியை இந்தியவையே திரும்பி பார்க்கும் அளவிற்கு தமிழக மக்கள் தந்தார்கள். கண்டிப்பாக அது என்னுடைய பிரச்சாரத்திற்கு தந்த வெற்றி இல்லை.

இந்த மக்களவை தேர்தலில் திமுக வெற்றிக்கு இரண்டு பேர் மட்டுமே காரணம். ஒன்று மோடி , இன்னொன்று எங்க டாடி . இந்த வெற்றி நம்முடைய தலைவருக்கு கிடைத்த வெற்றியாக தான் நான் பார்க்கிறேன் என கூறினார்.

Dinasuvadu Media @2023