50க்கும் மேற்பட்ட இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதி – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

The Health Secretary has said that corona prevention measures are being taken in Tamil Nadu on a wartime basis.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் மீண்டும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை என கூறியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தயவு செய்து பொதுமக்கள் மாஸ்க் போடுங்க எனவும் வலியுறுத்தி உள்ளார். 50க்கும் மேற்பட்ட இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.