சென்னை திரிசூலம் அம்மன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் ஆவார்.இவருக்கு சுதா என்ற மனைவியும் சிவானி ,தீபன் என்ற இரு குழந்தைகளும் உள்ளன.
இந்நிலையில் சுதா நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் தனது மகள் மற்றும் மகனை இருசக்கர வாகனத்தில் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்துள்ளார்.அப்போது மேடவாக்கம் பிரதான சாலையில் பாலம் தொடர்பான பணி அந்த சாலை குண்டும் குழியுமாக இருந்துள்ளது.அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென வாகனம் நிலைதடுமாறி கீழே சரிந்துள்ளார்.
அப்போது அவரது மகள் வலபுறமாகவும் அவரது மகன் இடதுபுறமாகவும் கீழே விழுந்துள்ளனர்.அப்போது பின்னால் வேகமாக வந்த பேருந்து எதிர்பாராமல் அவரது தலை மீது ஏறி இறங்கியுள்ளது.
அப்போது தாய் சுதாவும் மகள் சிவானியும் தலை நசுங்கி உயிரிழந்துள்ளனர்.எதிர்பாராமல் இடப்புறம் விழுந்த மகன் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.இதனை தொடர்ந்து பேருந்தை வேகமாக இயக்கிய ஓட்டுனரை போது மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் பேருந்தை வேகமாக இயக்கிய ஓட்டுநர் தங்கையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.மகன் கண்முன்னே தாய்,மகள் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…