Murder : பாஜக நிர்வாகி கொலை வழக்கு : பாளையம்கோட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.!

சில தினங்களுக்கு முன்னர் நெல்லை பாளையம்கோட்டை பகுதியில் மூளிக்குளத்தை சேர்ந்த பாஜக இளைஞரணி பொறுப்பாளர் ஜெகன் பாண்டியன், மூளிக்குளதத்தில் வீட்டிற்கு செல்லும் வழியில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இவரது கொலை சம்பவத்தை அடுத்து பாளையம்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் முதற்கட்டமாக அனிஸ், பாஸ்கர், சந்துரு, அஜித், விக்கி, வசந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் பிரபல கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரை கைது செய்யவில்லை என கூறி உறவினர்கள் மற்றும் பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர் . மேலும், இந்த வழக்கில் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
நேற்று இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மூளிக்குளம் பிரபுவை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இன்று பாளையம்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியனை பணியிடை நீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குற்றத்தை தடுக்க தவறியதாக கூறி பொறுப்பு காவல் ஆணையர் பிரவேஷ் குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025