ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ரூ.5 ஆயிரம் கொரோனா நிதி..!

Nalini, who is in jail in the Rajiv Gandhi murder case, has donated Rs 5,000 to the Chief Minister's Corona Relief Fund.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று வேலூர் சிறையில் உள்ள நளினி முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு தனது சேமிப்பில் இருந்து ரூ.5 ஆயிரம் நிதியாக வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக,கஜா புயலின் போது நளினி ரூ.1000 நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.