அதிமுக-வில் இருந்து நாஞ்சில் முருகேசன் அதிரடி நீக்கம்.!

அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் கன்னியாகுமாரி மாவட்ட நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் அதிமுக-வில் உள்ள அடிப்படை பெறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.