நெல்லை:பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் எட்டாம் வகுப்பு 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து,தீயணைப்பு துறை அதிகாரிகள்,கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி,கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கி காயம் அடைந்த 3 மாணவர்கள்,அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும்,மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து,அலுவலக கண்ணாடிகளை உடைத்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.இதனால்,காவலர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து,பெற்றோர்கள் அழுது கொண்டே பள்ளிக்கு விரைந்துள்ளனர்.மேலும்,சில பெற்றோர் தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர்.
இந்நிலையில்,மேலும் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால்,பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.இது மாணவர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…