புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.. சாய்ஸ் இருந்தால் நல்லதுதான்! – அண்ணாமலை

Published by
பாலா கலியமூர்த்தி

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 19ம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று, வசூல் சாதனையும் புரிந்து வருகிறது. இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்தவொரு ப்ரோமோஷனும் இல்லாமல் வெளியான லியோ படம் இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற திரைப்படமாக லியோ உருவெடுத்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் சக்ஸஸ் மீட் (வெற்றி விழா) விழா நடைபெற்றது. இதில், தளபதி விஜயை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகை தந்தனர். அதிலும் குறிப்பாக விஜயின் குட்டி கதைக்காக்கவும், அவர் பேசும் மற்ற சூசக பதில்களுக்காகவும் காத்திருந்தனர்.

ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்.! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.!

அனைவரும் எதிர்பார்த்ததுபோல், நடிகர் விஜயும் குட்டிக்கதை, சில விமர்சனங்கள், அரசியல், சில சூசக பதில்கள் கொடுத்து அரங்கத்தை அதிர வைத்தார். அப்போது, ஒரே புரட்சி தலைவர், ஒரே நடிகர் திலகம், ஒரே சூப்பர்ஸ்டார், புரட்சி கலைஞர், கேப்டன், ஒரே உலகநாயகன், ஒரே தல என பதிலடி கொடுத்தார்.

பின்னர், தளபதி என்றால் என்ன அர்த்தம். மக்கள் தான்  மன்னர்கள். நான் உங்கள் கீழ் இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என தனது அரசியல் பயணத்தை சூசகமாக கூறினார். இதையடுத்து, தொகுப்பாளினி 2026 (தமிழக சட்டமன்ற தேர்தல்) பற்றி கூறுங்கள் என கேட்டார்.

ஆனால், நடிகர் விஜய் 2026 உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி இருக்குனு மழுப்பலாக பதிலளித்தார். மீண்டும் அதே கேள்விக்கு சீரியஸா பதில் சொல்லுங்கள் என கேட்க, “கப்பு முக்கியம் பிகிலு” என மறைமுகமாக அரசியல் குறித்த கேள்விக்கு தனது ஸ்டைலில் பதில் கூறினார் தளபதி விஜய். இவ்வாறு நடிகர் விஜய் சொல்வதை பார்த்தால் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவது உறுதி என தெரியவருகிறது. இருப்பினும், நான் அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2026 சட்டமன்ற தேர்தல்.! ‘கப்பு முக்கியம் பிகிலு’ – விஜய் சூசக பதில்.!

தற்போது சமூகவலைத்தளங்களில் நடிகர் விஜயின் பேச்சு தான் வைரலாகி வருகிறது. அவரது அரசியல் பயணம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது, அண்ணாமலையிடம் விஜயின் அரசியல் பயணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில், தமிழகத்தில் 30, 40 ஆண்டுகளாக அரசியலில் பழையவர்களே இருந்திருக்கிறார்கள். புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்து தனது கருத்தை நிலைநாட்ட வேண்டும். தமிழகத்தில் 3 கட்சிகள் இருப்பதற்கு பதில் 6 கட்சிகள் என சாய்ஸ் இருந்தால் நல்லதுதான். எல்லாருடைய சித்தாந்தத்தையும் மக்கள் பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும் என அண்ணாமலை பதில் அளித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

14 hours ago