ஆன்லைனில் ஜல்லிக்கட்டு போட்டியை பதிவு செய்வதை கைவிட வலியுறுத்தி நூதன போராட்டம்.!

- ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு.
- இதனால் காளை வளர்ப்போர் ஆன்லைன் ஜல்லிக்கட்டு முறையை கைவிட வலியுறுத்தி திருச்சியில் நூதன போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், ஒரு காளை அதிகபட்சமாக ஒன்று மற்றும் இரண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், காளை வளர்ப்போர் விருப்பப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும்.
இதனால், ஆன்லைன் ஜல்லிக்கட்டு போட்டியை பதிவு செய்வதை கைவிட வலியுறுத்தி காளை வளர்ப்போர், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் திருவானைக்காவல் மேல கொண்டயம்பேட்டையை சேர்ந்த காளை வளர்ப்போர், தங்களது பத்துக்கும் மேற்பட்ட காளைகளை, ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்வதுபோல அலங்கரித்து தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்று நூதன போராட்டம் நடத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025