அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது- ஈபிஎஸ்..!

Published by
murugan

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெறும் கண்டனப் போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சேலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை ; அதிமுகவை எவராலும் அசைத்து பார்க்க முடியாது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது. 7 மாதகால திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். திமுக மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளது.

அதிமுகவினரை பழிவாங்க நினைத்தால், அதையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். அதிமுகவினர் மீது எத்தனை வழக்கு போட்டாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை எதனையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்வோம். ரெய்டு நடத்தினால் நாங்கள் பயந்துவிடுவோமா.. ? எங்கள் ரத்தத்தில் வீரம் ஊறியிருக்கிறது. திமுக அரசின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் டீசல் விலையில் 10 ரூபாய் குறைக்க வேண்டும். இன்னும் இரண்டரை ஆண்டுகள்தான் திமுக ஆட்சி இருக்கும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். அதனை மு.க.ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும்.  அம்மா’ சிமெண்டை-தான் இப்போது விலையை ஏற்றி “வலிமை” சிமெண்ட் என்று கொடுக்கிறார்கள். வலிமை சிமெண்டாம், நாங்க என்ன வலிமை இல்லாத சிமெண்டா கொடுத்தோம் ? “அம்மா” பெயர் இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

3 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

5 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago