ஊரடங்கு உத்தரவால் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸால் இந்தியாவில் 8000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் அனைவரையும் வீட்டுக்குள் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் பொதுமக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.மேலும் ஏப்ரல் 17-ஆம் தேதி தீரன் சின்னமலை பிறந்த நாளிலும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…