திமுக வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பற்றி திமுக எம்.பி கனிமொழி விளக்கம்.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி சார்பில் தலைவர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி பயிலக்கூடிய 20 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு வழங்கினார்.
இதன்பின் பேசிய அவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் என்பது யாருடைய வேலையும் பறிக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது அல்ல. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பெரியாரின் வழிவந்த நமது முதல்வர் தற்போது அதனை நிறைவேற்றி உள்ளார்.
மேலும், ஆண்களை வீட்டில் இருக்கச் சொல்லி பெண்கள் வேலைக்கு செல்லும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது தான் நமது திமுகவின் ஆட்சி என தெரிவித்த அவர், அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 தேவை என்ற சூழல் இருக்காது என்றும் தகுதியுடையவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவித்ததாக எம்.பி கனிமொழி விளக்கமளித்துள்ளார்.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஏழ்மை குடும்பம் மட்டுமல்லாமல் தகுதியுள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டிப்பாக செயல்படுத்துவார் என்று தெரிவித்திருந்தார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…