என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் மறைவு..முதலவர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்.
தமிழ்கத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக கடந்த 23-ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை அறிந்த முதலவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் மறைவு செய்தி வேதனை அளிக்கிறது. புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும், பாப்ஸ்க்கோ, AFT பஞ்சாலை தலைவராகவும் பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்காக உழைத்தவர் பாலன் என்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025