இங்கு தாமரை, சூரியன் நேரடியாக போட்டியிட்டால் என்டிகே வாபஸ்.. அயோத்தி சாமியார் தலைக்கு 100 கோடி – சீமான்

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாரத் என அவர்கள் நாட்டிற்கு பெயர் வைத்துள்ளார்கள், ஆனால், எங்கள் நாடு தமிழ்நாடு. வேறு பெயரை வைத்து விட்டால் எல்லாம் மாறி விடுமா?, எல்லாரும் ஒரே நாடு என்றால் கர்நாடகா ஏன் காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு தர மறுக்கிறது. இன்று பயிர் காய்கிறது, நாளை வயிறு காயும். ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்ததாக கூறினார்.

முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது. எனவே, பாரத் என்றாலும், சூரத் என்றாலும் கவலையில்லை, எனக்கு தமிழ்நாடு தான். இந்து என்ற பெயரும் ஆங்கிலேயர் வைத்தது தானே, அதையும் மாற்ற வேண்டியது தானே. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் வைத்தது தான், அப்படி பார்த்தால் நாடே அவர்கள் உருவாக்கி வைத்தது தானே. பெயரை மாற்றுவதால் ஒரு பலனும் இல்லை, 150 லட்சம் கோடி கடன் இருக்கிறது தள்ளுபடி செய்து விடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.

நாட்டின் பெயரை மாற்றுவதால் எல்லாருக்கும் கல்வி, எல்லாருக்கும் வேலைவாய்ப்பு, பசியில்லாத பாரதம் என இதெல்லாம் உருவாகி விடுமா?,  ஏதோ தேர்தல் வரும் நேரத்தில் இப்படியெல்லாம் நடக்குது. ஏன் ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் என பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டியது தானே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் வருவதால் சிலிண்டர் விலை குறைகிறது, சட்ட விதிகளில் பெயர்கள் மாறுகிறது, சந்திரயான் சரியாக நிலவில் இறங்குகிறது, சூரியனை நோக்கி ஆதித்யா செல்கிறது என விமர்சித்தார்.

என்னமோ அதிகார திமிரில் ஆடி வருகிறார்கள் எனவும் கூறினார். மேலும் சீமான் பேசுகையில், இந்தியா என்பது ஒரே நாடு அல்ல, தேர்தல் அரசியலமைப்பு சட்டமும் சொல்லவில்லை. ரேடியோவே ஆல் இந்திய ரேடியோ தான், இந்திய ரேடியோ கிடையாது. பல மாநிலங்கள், தேசங்களில் ஒன்றியம் தான் மாநிலங்களிவை. அப்படி இருக்கும்போது ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே தேர்வு  என எப்படி சொல்ல முடியும், ஒரே நாடு என்றால் காவிரியில் ஏன் தண்ணீரை பெற்று தர முடியவில்லை, ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்.

எல்லாம் மொழிக்கும் ஒரு தேசியம் நிலம் இருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டையும் தனதாக்கிக்கொள்ள துடிக்கிறார்கள். இதனால் தான் ஒரே தேசம் பாரத் என கூறுகிறார்கள். இவர்களை அடித்து விரட்டும் காலம் விரைவில் வரும் என கடுமையாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ராமேஷ்வரத்தில் தாமரை, சூரியன் நேரடியாக போட்டியிட்டால் எனது வேட்பாளரை திரும்ப பெறுவேன்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றுங்கள், நான் முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தருகிறேன். அமைச்சர் உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் 100 கோடி தருகிறேன். தலையை வெட்டு, நாக்கை வெட்டு என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல, கசாப்பு கடைக்காரர் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

9 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

12 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago