#Breaking : பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி !

தீபாவளி வெளியாகும் படங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதே நாளில் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படமும் வெளியாக உள்ளது.
தீபாவளியன்று எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவும், அப்படி அனுமதியின்றி திரையிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.இதனால் பிகில் படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளிக்காமல் இருந்ததால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்த நிலையில் தீபாவளி படங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .முதலமைச்சர் பழனிசாமி, செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்திப்புக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் கடம்பூர் கூறுகையில்,சிறப்புக் காட்சிக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறிய நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில் சிறப்புக் காட்சிக்கு ஏற்கனவே அனுமதி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025