#BREAKING :கட்சிக்கு ஒரு தலைமை ,ஆட்சிக்கு ஒரு தலைமை -ரஜினிகாந்த் முடிவு

Published by
Venu

கட்சிக்கு ஒரு தலைமை ,ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.அப்பொழுது அவர் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில்,சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன்.நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி. அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம் என்று பேசினார். இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.அவர் அறிவித்த முதலே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது முதலே அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும்  இடைத்தேர்தல் ஆகிய இரண்டிலும் ரஜினி போட்டியிடவில்லை. இதற்கு இடையில் நடிகர் ரஜினி கூறியதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கமல் குறித்த பேச்சு தான் .ஆனால் ரஜினி -கமல் என இருவரும் அரசியலில் இணைய வேண்டும் என்ற கருத்து நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல் 60 விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இதில் நடிகர் விஜய்யின் தந்தையும்,இயக்குனருமான சந்திரசேகர் பேசினார்.அவர் பேசுகையில்,ரஜினியும் கமலும் இணைந்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று தெரிவித்தார்.இவர் கூறியது முதல் இந்த கருத்து அதிகம் உலாவி வந்தது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் ரஜினி குறித்து கேட்டபோது,அவசியம் ஏற்பட்டால் நானும் ரஜினியும் அரசியலில் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.இந்த கருத்தை கமல் தெரிவித்த சிறிது நேரத்திலேயே ரஜினிகாந்த் இது குறித்து கூறுகையில்,மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் என்று தெரிவித்தார்.இருவரும் ஒரே மாதிரியான கருத்துக்களை தெரிவித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதன் விளைவாக அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்தார்கள்.இது ஒரு புறம் இருக்க மறு புறம்  தற்போது நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை,மேலும் யாருக்கும் ஆதரவு அளிக்க வில்லை என்றும் தெரிவித்தார்.அவரின் அரசியல் குறித்த பேச்சுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் அவருக்கு பின்னால் கட்சி தொடங்குவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்து தேர்தலிலும் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியினை ஓரளவு தாக்கு பிடித்தார்.ரஜினியின் முழு நேர அரசியலை எதிர்பார்த்து அவர்களது ரசிகர்களை போல அனைத்து தரப்பினரும் காத்து இருந்தனர்.ஏனென்றால் அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து 2 ஆண்டுகள் நிறைவடைந்தது . 

இதற்கு இடையில் தான் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை ரஜினி சந்தித்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி ,கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன்.கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம் உள்ளது. அதுபற்றி பின்னர் தெரிவிக்கிறேன் என கூறினார்.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மாவட்ட செயலாளர்கள் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம் என்று கூறினேன்.வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பு.2017-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லை.2017  -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவதாக கூறினேன். தேர்தலுக்கு பிறகு அடிப்படைக்கு அவசியமான பதவிகள் மட்டுமே எனது கட்சியில் இருக்கும்.50 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படும்.வேலை எதுவும் செய்யாமல் கட்சி பதவியே தொழிலாக பார்க்கிறார்கள்.எனக்கு முதலமைச்சர் பதவியில் எனக்கு ஆசையே  இல்லை.1996-ஆம் ஆண்டு கூட எனக்கு வாய்ப்பு வந்தது.ஆனால் நான் விரும்பவில்லை. அனைத்து தகுதிகளை கொண்ட இளைஞர் ஒருவரை அங்கு உட்கார வைப்போம்.கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு.ஆட்சி தலைமை சரியாக இல்லை என்றால் கட்சி தலைமை தூக்கி எறியும்.ஒரு மாற்று அரசியல் வேண்டும், நல்ல தலைவர்கள் வேண்டும். அண்ணா பல நல்ல தலைவர்களை உருவாக்கினார். இப்போது யார் இருக்கிறார். நிறைய தலைவர்களை நாம் அடையாளம் காண வேண்டும் என்று பேசினார். 

 

Recent Posts

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

8 seconds ago

LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…

47 minutes ago

“சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு”- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

1 hour ago

ரவி மோகன் விவகாரம்: ”நாளைய விடியல்” – கெனிஷாவின் பதிவால் பரபரப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…

2 hours ago

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

2 hours ago

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

3 hours ago