Tamilnadu CM MK Stalin
நேற்று நெய்வேலி எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன் அவர்களின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்று திருமண மக்களை வாழ்த்தி வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பேசினார். அவர் கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே மத்திய அமைச்சரவையில் திமுக முக்கிய பங்காற்ற முடியும் என கூறினார்.
நேற்று காணொளி வாயிலாக முதல்வர் பேசுகையில், தனது தொகுதிக்கு தேவையானவற்றை கேட்டு பெறுவதில் எம்எல்ஏ சபா ராஜேந்திரன் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அதிகாரத்தில் இருக்கும் போது, நெல்லிக்குப்பம் பகுதியில் மலட்டாறு திட்டத்தை நிறைவேற்றி அப்பகுதி மக்களுக்கு பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர் மட்டம் உயர காரணமாக இருந்தவர் சபா ராஜேந்திரன் என கூறினார்.
அடுத்து, திருமண விழாவின் போது நான் வைக்கும் கோரிக்கைகள் இரண்டு தான். ஒன்று குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். இன்னொரு கோரிக்கை மணமக்கள் வீட்டுக்கு விளக்காகவும், நாட்டுக்கு நல்ல தொண்டர்களாகவும் விளங்க வேண்டும். நம்முடைய வீடு மட்டுமல்ல. நாடும் நன்றாக இருக்க அதற்காக பங்களிக்க வேண்டும் இதுதான் தனது கோரிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…
சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…
விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…
டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…