40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த நேரத்தில் சென்றால் மட்டுமே மது.!

40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு, தனியார் நிறுவனங்கள் சார்ந்த அனைத்து துறைகளும் மூடப்பட்டது. குறிப்பாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மது அருந்துபவர்கள் தாங்களாகவே சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டது. இதை அறிந்த காவல்துறை அவர்களை கைது செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனர். பின்னர் கொரோனா தாக்கம் குறையாமல் இருந்ததால் மீண்டும் 2 ம் கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைரஸ் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், தினந்தோறும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இதனால், மேலும் 2 வாரத்திற்கு அதாவது மே 17 ஆம் தேதி வரை 3 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மத்திய மாநில அரசுகள் வெளியிட்டது. அதில், குறிப்பாக மதுக்கடைகளை திறக்கலாம் என்றும் அதனை மாநில அரசுகள் முடிவெடுத்து அனுமதி அளிக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதன்படி, பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் கடை வாசலில் குவிந்து வருகிறார்கள். அதனால் ஆண்களுக்கு தனி வரிசை பெண்களுக்கு தனி வரிசை என பிரித்து அவரவர் வரிசையில் நின்று ஆயிரக்கணக்கில் மது பாட்டில்களை வாங்கி செல்கின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கலாம் என்று அரசு உத்தரவிட்டது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை என்றும் 40-50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மது பாட்டில்களின் விலையும் 10 முதல் 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் மதுக்கடைகளை திறக்கலாம் என்று அனுமதி வழங்கிய தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பலர் எதிர்ப்புகளும் ஒரு பக்கம் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025