நாங்குநேரி சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Edappadi Palanisamy

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பள்ளி மாணவர் மீது சாதிய ரீதியிலான நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடரபான அறிக்கையில், நாங்குநேரியில் பட்டியல் சமூக மாணவர் தாக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. மாணவ சமுதாயத்தினரிடையே சாதி சிந்தனையை தூண்டி, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்துடன் விளையாடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

சாதி இன மோதல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க வேண்டும். மாணவர்களின் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைப்பது தொடர் கதையாக உள்ளது. அதுவும், திமுக ஆட்சி நடைபெறும் போதெல்லாம் சாதி, மத மோதல்கள் நடப்பது வழக்கமாக உள்ளது. வரும் முன் காப்போம் என்ற எண்ணமே திமுக அரசுக்கு இல்லை. மாணவர்களுக்கு நன்னெறி, நீதி போதனை வகுப்புகளை நடத்தி மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்றுள்ளார்.

மேலும், நாங்குநேரியில் நடந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். சாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும். அதன்மூலம் சாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டுபிடித்து, முளையிலேயே அகற்றிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்