சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறியிருக்கிறார் – டிடிவி தினகரன்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை உருவாக்க அதற்கான பயணம் தொடரும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேட்டி.

தஞ்சையில் மருது சகோதர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியான கருத்து தான். ஓபிஎஸ் எப்போதும் நிதானமாக பேசுபவர்.

அவர், சரியான கருத்தை தான் கூறியுள்ளார். மனதில் பட்ட கருத்தைத் துணிந்து சொல்லியிருக்கிறார். அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது இலக்கு. இயக்கத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவும் அமமுக உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை உருவாக்க அதற்கான பயணம் தொடரும் என்றும் இந்த முயற்சியை எங்களது இறுதி மூச்சு உள்ளவரை தொடர்வோம் எனவும் தெரிவித்த டிடிவி,  அதிமுகவை நிச்சயமாக மீட்டெடுப்போம் என்றார்.

இதனிடையே, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதி முக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

3 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

4 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

6 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

7 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

7 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

7 hours ago