10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்.!

10ஆம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி இன்று முதல் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குபவர்கள் முதற்கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் 20 மாணவர்களுக்காவது சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களும், பெற்றோர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து சான்றிதழை மாணவர்கள் தங்கள் படித்த பள்ளியில் சென்று வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025