மீண்டும் புழக்கத்திற்கு வரும் 1000 ரூபாய் நோட்டு.? ப.சிதம்பரம் கடும் சாடல்.!

P Chidambaram

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு புழக்கத்தில் விட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு நேற்று, மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் 30க்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் அறிவுறுத்தல். வரும் செவ்வாய் முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் திரும்ப கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவுறுத்தல்.

இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்ற்னர். இதுபற்றி முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் முக்கிய தலைவருமான ப.சிதம்பரம் கூறுகையில், மத்திய அரசு , 2000 நோட்டை திரும்பப் பெற்று, அவற்றை மாற்ற செப்.30 வரை அவகாசம் அளித்துள்ள நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான்.

2000 நோட்டுகள் மக்கள் புழக்கத்திற்கு சரியான தொகையல்ல. இதை நாங்கள் 2016 நவம்பரிலேயே கூறிவிட்டோம். 500, 1000 பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க 2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. என்றும், பணமதிப்பிழப்புக்கு பிறகு புதிய 500 நோட்டை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது என்றும், மீண்டும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ரூ.1000 நோட்டை மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்