நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை காவலராக பெங்களூரில் பணியாற்றி வந்தவர் தான் உதயகுமார். இவருக்கு மீனா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, முரளிதரன் ஆகிய இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த உதயகுமார் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான பணகுடிக்கு இன்று காலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டுவரப்பட்டது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பணகுடியில் உள்ள மயானத்தில் உதயகுமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் ஆகியோர் உயிரிழந்த காவலரின் உடலை சுமந்து சென்றுள்ளனர். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரர்கள், உயிர் இழந்த உதயகுமார் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் அவர் மீது போர்த்தப்படும் இந்த தேசியக் கொடியானது அவர் மகன் முத்தையா முரளியிடம் ஒப்படைக்கப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…