தலைமைச் செயலாளராக இருப்பதால் பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது, தனக்கு வழங்கும் பரிசை தவிர்க்குமாறு தமிழ்வளர்ச்சித்துறைக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். 2021 ம் ஆண்டு சிறந்த நூலாக தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய “மூளைக்குள் சுற்றுலா” தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைமைச் செயலாளராக இருப்பதால் பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது, தனக்கு வழங்கும் பரிசை தவிர்க்குமாறு தமிழ்வளர்ச்சித்துறைக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு […]
இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம். இலங்கை பொருளாதார நெருக்கடி – தேவையான உதவிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த அக்கடிதத்தில், இலங்கைக்கு தமிழகத்திலிருந்து உதவிப் பொருட்களை அனுப்ப உரிய அனுமதி அளிக்க, வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளார். இலங்கை […]
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நடிகை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் மணிகண்டன் மீது பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், 2021 ஜூன் 20-ம் தேதி மணிகண்டன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் […]
பாலியல் வன்கொடுமை வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. சென்னையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டார். சிறுமியை 7 வயது முதல் 16 […]
இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இவரைப் போன்ற பொறுப்பற்றவர்களின் பதவிகள் பறிக்கப்படவேண்டும் என மக்கள் நீதி மய்யம் ட்வீட். உத்திரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும். நீங்கள் ஹிந்தியை நேசிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புடையவர். நாங்கள் பிராந்திய மொழிகளை மதிக்கிறோம், ஆனால் இந்த நாடு ஒன்றுதான், இந்தியா ‘இந்துஸ்தான்’ அதாவது இந்தி பேசுபவர்களுக்கான இடம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. எனவே, […]
தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலி கொல்லி பசை விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை. தமிழகத்தில் எலி கொல்லி பசையை (எலிபேஸ்ட்) விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்து வரும் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலி கொல்லி பசை விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தேர்தல் பரப்புரையின் போது “சொந்தங்களே சிந்திப்பீர்” என்ற CD-யை வினியோகித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை தற்போது ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் விதிகளை மீறி பிரச்சார குறுந்தகடு விநியோகித்ததாக அன்புமணி ராமதாஸ் மீது […]
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் பேசிய அமைச்சர், ரூ.1,018.85 கோடியில் 19 மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.15 கோடியில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மருத்துவ […]
இலங்கைக்கு நிதியுதவி அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உயிர் காக்கும் மருந்து உள்ளிட்டவை […]
முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவரான எல்.முருகன் அவர்கள்,திமுகவின் முரசொலி அலுவலகம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று கூறியதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து,சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எல்.முருகன் மீது திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கிடையில்,தமிழக பாஜக தலைவராக […]
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒருநாள் மின்பயன்பாடு வரலாற்றில் இல்லாத வகையில் நேற்று ஒரேநாளில் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நேற்று 28/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 387.047 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,370 MW.இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச […]
ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்படவில்லை என்றால், ஏராளமான குடும்பங்கள் தங்களின் தலைவர்களையும், உடமைகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடும். சென்னை திருவான்மியூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை திருவான்மியூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மயிலாப்பூரைச் […]
அதிமுக செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். அதன்படி, அதிமுக செயற்குழுவில் 80 பெண்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுக உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், செயற்குழு பொதுக்குழு கூட்டம் மே மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலைத் தொடர்ந்து கீழ்மட்ட நிலைகள் வரை உள்ள அனைத்து பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மே […]
நாளை முதல் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளித்து பதிவுத்துறை அறிவிப்பு. நாளை முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வு விவரங்களையும் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை மே 1 முதல் தொடங்க உள்ளதால், கோடை விடுமுறை அமர்வு ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையில் நீதிபதிகள் பாரத […]
சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சியின்போது சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு அருகில் உள்ள வீட்டில் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கான பயிற்சி மையம் உள்ளது.நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்த நிலையில்,பயிற்சி தளத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டிருந்த போது,வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையை நள்ளிரவு […]
பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு. இலங்கை பொருளாதார நெருக்கடி – தேவையான உதவிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டு வந்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட தமிழக அரசு தயாராக உள்ளது. இலங்கையில் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வு, உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. […]
கடந்த ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது தமிழகம் காஷ்மீர் ஆக மாறி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்ததாக மாரிதாஸ் மீது 505(1)&(2), 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்தது செல்லாது […]
தமிழகத்தில் இளம்பெண்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.அந்த வகையில்,விருதுநகர்,வேலூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களில் அண்மையில் நடைபெற்ற கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.பொதுவாக, அவர் பணி முடித்து விட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் தனது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்த […]
அரசுப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என பேரவையில் அமைச்சர் அறிவிப்பு. அரசுப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட வழித் தடங்களை ஆராய்ந்து, மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் மின் பேருந்து பிரச்சனைக்கு பேரவை தொடருக்கு பின் உரிமையாளர்களை அழைத்து தீர்வு காணப்படும் என்றும் கூறினார் […]
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில்,மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.அப்போது,கட்சியின் நிர்வாகிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.துரை வைகோ மதிமுக தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,மதிமுகவில் துரை வைகோவிற்கு பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில் 3 மாவட்ட செயலாளர்களும் […]