சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய பொதுமக்களிடம் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.2.18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 31ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 2,603 பேரிடமிடருந்து ரூ.5.45 லட்சம் […]
இனி ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு அனுமதித்தால்,அது மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாக அமையும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த அனைத்து தற்கொலைகளுக்கும் காரணம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆனது தான் எனவும், ஆன்லைன் சூதாட்ட சாத்தானுக்கு இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்க போகிறோம்?,எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை தொடங்கவுள்ள நிலையில்,வரும் கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக […]
நாளை சட்டப்பேரவை கூட்ட தொடர் தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், எம்எல்ஏ-வின் உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை:துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பான கோட்டாட்சியாரின் விசாரணை அறிக்கை,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில்,சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து,சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு புதுக்கோட்டை அரசு […]
கொரோனா பரவல் எதிரொலியாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓமைக்ரான் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் எதிரொலியாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், எனது ஊழியர் ஒருவருக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் பரிசோதனை செய்ததில், நெகட்டிவ் என சோதனை முடிவுகள் வந்தது. இருப்பினும் நான் தனிமைப்படுத்தப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் […]
சென்னை:அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி,தமிழக அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் அவர்களின் வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் மருத்துவக் காப்பீட்டு […]
சென்னை:திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் டீக்காரம் மற்றும் அவரது மனைவியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கவுன்டரில் நேற்று ஊழியர் டீக்காரம் என்பவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது,அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் வரத்து இல்லாத சமயத்தில் அடையாளம் தெரியாத சிலர் முன்பதிவு கவுன்டருக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் ஊழியரை கட்டி வைத்துவிட்டு கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளை […]
பெண்களுக்கு அறிவு கிடையாது,அவர்கள் அடுப்பங்கரைக்கும்,பிள்ளைபெறவுமே லாயக்கு என நினைக்கும் பாஜக / ஆர் எஸ் எஸ் அரசிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? என ஜோதிமணி எம்.பி ட்வீட். பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக மாற்றும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மோடி அரசு அனுப்பியுள்ளது. அதில் 31 எம் பிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஒருவர் மட்டுமே பெண். இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெண்களின் திருமண வயதை […]
சென்னை:61-வது நாளாக எந்தவித மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் இன்று விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையானது ஏற்றமாகவே உள்ளது. இதன்காரணமாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது.இதனால்,பெட்ரோல்,டீசல் […]
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை முதலில் தென்னாப்பிரிக்காவில்கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸானது தற்போது அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஓமைக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவத் […]
சென்னை:21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். 2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.அதன்படி,பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் […]
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படும். இல்லம் தேடிக் கல்வி திட்டம் மிகப்பெரிய வரப் பிரசாதம். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.
5 நாட்களாக சிகிக்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சிகிக்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து, சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]
கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்தின் நேர்முக உதவியாளர் லெட்சுமிநாராயணன் தந்தை உடல்நலக் குறைவால் காலமானார் இதுகுறித்து ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான N. தளவாய்சுந்தரம் அவர்களின் நேர்முக உதவியாளர் M. லெட்சுமிநாராயணன் தந்தை K. முத்துகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் லெட்சுமிநாராயணன் […]
திருச்சி என்.ஐ.டியில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர் சென்று திரும்பிய 577 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருச்சி என்.ஐ.டியில் கொரோனா உறுதியானவர்களில் பலர் வெளி மாநிலங்களைச் சார்ந்தவர்கள், மேலும் ஓமைக்ரான் தொற்றா..? என்பதை கண்டறிய மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சலுகை கோரும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள், உதவியாளர் உள்ளிட்ட ஏதேனும் சலுகை கோர விரும்பினால் வரும் 13-ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், நோயின்தன்மை, தேவையான சலுகை குறித்து உரிய மருத்துவர் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2020-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை ஆண்களுக்கு நிகராக 18-லிருந்து 21 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். சமீபத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர், விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கான நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு […]
விதிகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை ஏற்று அதிமுகவின் வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த உத்தரவிடக்கோரி அதிமுக வழக்கு தொடுத்திருந்தது.
பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல். திருநெல்வேலியில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை, போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று தொடங்கி வைத்தார்கள். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதை போல் பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் கிட்டத்தட்ட 17,000 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். மக்கள் எந்தவித பாதிப்பும், சிரமமில்லாமலும் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் […]
கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் தகவல். சிம் ஸ்வாப் என்ற முறையில் கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறை கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டது என்றும் கூறினார். அதாவது, மற்றொரு […]