சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சர்ச்சைகள் வந்தன. பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டு அவரை ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் கட்சியிலிருந்து நீக்கினர். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டு, இரட்டை தலைமை […]
பிளஸ் 2 மாணவ, மாணவிகள் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2020-21ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கடந்த 19ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டியிருந்தார். மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி பதிவு செய்து www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். உயர்கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, இந்தாண்டு […]
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக-வின் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ,இக்காலகட்டத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் ,போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு,ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் அவர் வீடு உட்பட 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் தொகுதியில் […]
நடிகர் விஜய் செய்த மேல்முறையீட்டு மனு நாளை நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா முன்பு விசாரணைக்கு வருகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,891 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,891 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,41,168 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 138 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,809 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 2,423 பேர் […]
நடிகர் விஜய் செய்த மேல்முறையீட்டு மனு நாளை நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா முன்பு விசாரணைக்கு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண […]
ஈரோடு புறநகர் மாவட்டத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். கழக நிர்வாக வசதியைக் கருத்தில்கொண்டு, ‘ஈரோடு புறநகர் மாவட்டம்’ என செயல்பட்டு வரும் மாவட்ட கழக அமைப்பு, இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக ‘ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்’, ‘ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்’ என இரண்டு மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் […]
“அதிமுகவில் இருந்து யாரையும் நீக்க ஓபிஎஸ், இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை” என சசிகலா ஆதரவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். இதனால் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் அதிமுக தொண்டர்களை கட்சி தலைமையில் இருந்து நீக்கி வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து சசிகலா அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடம் தொலைப்பேசியில் பேசி வருகிறார். இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டுவது […]
ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகளுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று மீன் பிடித்து வருகின்றனர். இதில் சிலர் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரட்டை மடி வலைகளால் மீன் வளம் குறையும் அபாயம் இருப்பதால் இதனை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் அனைத்து விசைப்படகு […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி. சேகர், திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது. எந்த விமர்சனத்தையும் 100 நாட்கள் வரை வைக்க வேண்டாம் என்று நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு […]
இந்தியாவுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உலகம் முழுவதும் 10 நாடுகளில் 1,571 முக்கியப் பிரமுகர்களின் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டு, முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன. அந்த வகையில்,இந்தியாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் தொலைபேசி ஹேக் செய்யப் பட்டுள்ளதாகவும்,அவ்வாறு ஹேக் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் பலர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக […]
மின்வாரிய ஊழியர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு. மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பிற அரசுத்துறை ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், மின்வாரிய ஊழியர்களுக்கும் அறிவித்துள்ளனர். அதன்படி, ஜூன் 30, 2025ம் ஆண்டு வரை புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் […]
காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிரான கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டிற்குள் செயல்படுத்தப்படும் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: […]
தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற முடியும் எனும் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல்ஹாசன் ட்வீட். சென்னை கிண்டியில் நட்சத்திர விடுதியில் நேற்று ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரூ.28,508 கோடி மதிப்பில், மொத்தம் 49 திட்டங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் இவ்விழாவில் பேசியா முதல்வர், தமிழ்நாடு முதலீட்டார்களின் முதல் முகவரியாக மாறவேண்டும் என்றும் நிச்சியம் மாறும் எனவும் தெரிவித்தார். […]
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி கோயமுத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு […]
தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சியில் தன்னாட்சி: ஜனநாயகத்தின் உயிரோட்டம் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைந்திருக்கிறது என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு, கிராம சபைக் கூட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெரிய அளவில் தமிழகத்தில் உண்டாக்கியது மக்கள் நீதி மய்யம். ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் பாதையை நோக்கி தமிழகத்தை நகர்த்துவதும் […]
இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்திய கடல்சார் மீள்வள மசோதா, 2021-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம். அந்த கடிதத்தில், நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரின்போது மத்திய நிறைவேற்ற உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021, இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால், அதனை நாடாளுமன்றத்தில் முன்மொழிய செய்யவேண்டாமென வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு கொண்டுவரவுள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர […]
சிவசங்கர் பாபா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் 3 பேர் சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தனர். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிவசங்கர் பாபா கைதாகி 3 போக்சோ வழக்கு உள்ள நிலையில் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது. இதனால், சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியர்களை அழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டு 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சிவசங்கர் பாபா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் […]