வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்து தற்போது 68.50 அடியாக இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி என்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணை மூலமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தங்களின் குடிநீர் தேவையையும், பாசனத்தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடியாகும். தற்போது இந்த அணையில் 68.50 அடி நீர் வரத்து இருப்பதால் […]
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை தொடங்கினர். கரூர் மாவட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உட்பட 26 இடங்களில் சோதனை நடைபெற்றது. 13 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு. சென்னையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நிலையில், மரியாதை நிமித்தமாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து தமிழ் திரையுலகினருக்கு விளக்கம் தர தயார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஏற்கெனவே இருந்து வரும் ஒளிப்பதிவு சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு திரை பிரபலங்கள் பலரும் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் திரைத்துறையினரின் உரிமைக்கு பதிகப்பானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் திரையுலகிற்கு எந்த ஒரு குறை என்றாலும் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பெருமை 10 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாக நடிகை சாந்தினி புகார் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை கொடுத்த பாலியல் புகார் ஏற்கனவே விசாரணையில் உள்ளது. பாலியல் […]
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கரின் வீட்டில் ஐ.டி ரெய்டு என அதிமுக தலைமை கண்டனம். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் ஐடி சோதனையால் அதிமுகவினர் […]
சிவசங்கர் பாபாவுக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீசார் டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் […]
குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் முக்கியமான ஒன்றாக அமைந்திருந்தது. இந்த திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. இந்த நிலையில், […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் வெளியானதை தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தயாராகி வருகின்றனர். மேலும் இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஜூலை 26 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று அறிவித்திருந்தார். இருந்தபோதிலும் சில பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை முன்பிலிருந்தே நடைபெற்று வருகிறது. அதேபோன்று மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கடந்த சில […]
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்றி புதிய பேருந்துகளை வாங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் இயங்கவில்லை என்றும் அவர்களின் வசதிக்காக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் வைஷ்ணவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, 10% மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தான் பேருந்துகள் கொள்முதல் செய்ய போக்குவரத்துக்கழகம் முடிவு செய்திருப்பதாகவும், இது மாற்றுத்திறனிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அதனை ரத்து செய்ய […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சற்று நேரத்திற்கு முன்பு ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்துவது, சசிகலா விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. […]
சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை எழும்பூர் பகுதியில் இருந்து, 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கட்டிடத்தில் சிக்கிய ஊழியர்களை ராட்சத இயந்திர மூலம் மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தீயை அணைக்கும் […]
சேலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வறுமைகோட்டியிற்கு கீழ் உள்ளவர்கள் உட்பட பலருக்கு 2 லட்சத்து 11 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இல்லாத போலியான நபர்கள் மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் […]
தமிழகத்திற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கடந்த 19-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். அப்போது, தமிழக சட்டப்பேரவையில் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்தவும், சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கவும், மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் […]
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக எம். அப்துல்ரகுமான் தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முதன்மை துணைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான எம். அப்துல்ரகுமான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 2020-21ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, இன்று முதல் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அந்தவகையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி, www.dge.tn.gov.in & www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள்து பதிவெண் மற்றும் பிறந்த […]
நடிகர் விஜய் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு பட்டியலிட படித்துறைக்கு உத்தரவு. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சொகுசு கார் வரிவிலக்கு தொடர்பானது மேல்முறையீட்டு வழக்கில் தனிநீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல் விசாரணை பட்டியலிட வேண்டும் என்று நடிகர் விஜய் […]
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 438-ஆம் ஆண்டு திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தூத்துக்குடியில் பனிமயமாதா பேராலய திருவிழாவானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவதுண்டு. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் வருவதுண்டு. இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, இந்த திருவிழா பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து, தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடி பனிமயமாதா […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், ஆளுநர் மாளிகை முன்பதாக முற்றுகை போராட்டம். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. பெகாஸஸ் பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் […]
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வருகைக்காக மதுரையில் சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட மாநகராட்சி துணை ஆணையர் பணியில் இருந்து விடுவிப்பு. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதுரையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு வருவதையொட்டி சாலைகளை சீரமைக்க மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாநகராட்சி மண்டலம்-4 சத்ய சாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் 22.07.2021 முதல் 26.07.2021 வரை நேரில் கலந்துகொள்ள உள்ளார். எனவே அன்னாரின் […]