ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாத காலம் கால அவகாசம் நீட்டிப்பு. கடந்த 2017ம் ஆண்டு செப்.25-ல் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில், 11வது முறையாக 6 மாதம் கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 26 மாதங்களாக முடங்கியுள்ள ஜெயலலிதா மரணம் […]
மாநில மொழிகளை மட்டும் அல்லாமல் ஆங்கிலத்தையும் அகற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என திமுக எம்பி திருச்சி சிவா குற்றசாட்டு. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, மத்திய அரசு தொடர்ந்து மாநில மொழிகளை புறக்கணிக்கிறது. மாநில மொழிகளை மட்டும் அல்லாமல் ஆங்கிலத்தையும் அகற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றசாட்டியுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசு இந்தியில் மட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் கொடுத்த ஊழல் பட்டியலின்படி எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு வீட்டில் சோதனை நடைபெற்றது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். முன்னாள் போக்குவரத்துத்துறை எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சொத்து குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து, விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று […]
சென்னையில் ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். சென்னையில் ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். மேலும், 181 என்ற இலவச எண்ணில் உதவி மையத்தில் பெண்கள், சிறார்கள் ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆணையர் சங்கர் ஜிவால், ‘நிர்பயா திட்டத்தின் கீழ் […]
காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு. காவல் துறையினர் தங்கள் சொந்த தேவைக்காக தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கைதிகளை அழைத்து செல்லுதல், வாரண்ட் தொடர்பான பணிகள் தவிர மற்ற சொந்த பயணங்களுக்கு காவல்துறையினர் டிக்கெட் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், விதிகளை முறையாக […]
நடிகை குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார் என கேட்டு, சென்னை சைபர் கிரைம் போலீஸ், ட்விட்டருக்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளது. பிரபல நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் முடக்கியுள்ளார். ட்விட்டர் பக்கத்தை முடக்கியது மட்டுமல்லாமல், அதில் உள்ள பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2020-ம் ஆண்டு ஏப்ரலிலும் இவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது தொடர்பாக குஷ்பூ, கடந்த 20-ம் தேதி, தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும், […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 30.6.2021-ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் விவரங்கள் : அதன்படி, கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 18 வயதிற்குள் உள்ள 14,01,894 பள்ளி மாணவர்கள். 19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16,49,473. 24 முதல் […]
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக முத்து காலிங்கன் கிருஷ்ணன் நியமனம். மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பதவி வகித்த முத்து காலிங்கன் கிருஷ்ணன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருப்பார் என மத்திய உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தயுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதாவது வரும் புதன்கிழமை திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக எடப்பாடி பன்னீர்செல்வம், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்துள்ளனர். திமுக அரசு பொய் வழக்குப் போடும் அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டியுள்ளது. தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என ஓபிஎஸ், ஈபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளனர். நீட்தேர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை. அதிமுகவை […]
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவையில், கனமழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள, திண்டுக்கல், தேனி, தென்காசி, ஆகிய மாவட்டங்ள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு […]
மகாராஷ்டிரா மாநில கழக செயலாளர் பொறுப்பில் ஆர்.கணேசன் இன்று நியமிக்கப்படுகிறார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில கழக செயலாளர் நியமனம் கணேசன் என்பவரை நியமனம் செய்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இதுகுறித்த அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலக் கழக பொருளாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.கணேசன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றும் மகாராஷ்டிரா மாநில கழக செயலாளர் பொறுப்பில் ஆர்.கணேசன் இன்று நியமிக்கப்படுகிறார் எனவும் […]
தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள். தமிழகத்தில் புதிதாக தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டெண்டரில் சிறு குறு நிறுவனங்கள் பங்கேற்கும் போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெண்டரில் பங்கேற்கும் நிறுவனத்துக்கு முன் அனுபவம் தேவையில்லை என்றும், டெண்டர் தொகை கட்ட தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக எம்.ஆர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து நேற்று எம்.ஆர் விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம் மற்றும் […]
பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும், துணைத்தேர்வு எழுத இருப்பவர்களும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் கொரோனா காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் மாணவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கருத்துபவர்களும், பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 2020-21ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. […]
திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜர். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் மேடையமைத்து பேச காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து எச்.ராஜா போலீசாரையும், நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக ஹெச் ராஜா மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் இந்த வழக்கில் மூன்று ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில், தந்தை பெரியார் […]
பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கோவைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர். நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை நிரம்பி உள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. […]
சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா,அரசியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக இணைத்து நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்.தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் இதழ் ஆசிரியர். பிறப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதியில் 1884 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி சுப்பிரமணிய சிவா பிறந்தார்.1903 ஆம் ஆண்டு ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் என்பவர் இவரது […]
புதையலுக்காக வீட்டில் 20 அடி குழி தோண்டி மாந்திரீக பூஜை செய்த 3 பேர் கைது. பெரம்பலூர் மாவட்டத்தில், ஒரு கிராமத்தில், ஐஸ் வியாபாரி பிரபு என்பவர் வீட்டில் புதையல் எடுப்பதற்காக சிலர் குழி தோண்டி வருவதாக, போலிஸாருக்கு தொலைபேசி வாயிலாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டிற்குள், மாந்திரீக பூஜை செய்து, 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஐஸ் […]
சென்னை துரைப்பாக்கத்தில் தனியார் விளம்பர பலகையை கிழித்தெறிந்த எம்.எல்.ஏவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சென்னை துரைப்பாக்கம் கார்ப்பரேஷன் சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் பக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காவை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து இதனை பராமரித்து வந்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்த பூங்காவின் வெளியே காவலாளி ஒருவரை நியமித்து பூங்காவிற்கு மக்கள் நுழைவதை தடுத்து வந்துள்ளது. இந்த சம்பவம் […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,872 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,872 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,43,040 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 133 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,838 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 2,475 பேர் […]