கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து குழித்துறை குற்றவியல் நீதிபதி உத்தரவு. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை என்ற இடத்தில் சில தினத்துக்கு முன்பு, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா இந்து மத கடவுள்கள் குறித்தும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் குறித்து விமர்சித்துப் பேசினார். இந்த நிலையில், இந்த வீடியோ […]
வெளிநாட்டில் பயின்ற தமிழக மாணவர்கள் மருத்துவ சேவை செய்ய கட்டணம் வசூலிப்பதை நிறுத்த தமிழக அரசு வேண்டும். வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க, பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘வெளிநாட்டில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஓராண்டு கட்டாய மருத்துவ சேவை Compulsory Rotatory Residential […]
ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததற்காக ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்றை 2000 ஆம் வருடத்தில் சென்னையை சேர்ந்த காளியப்பன் என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து நடத்தினார். ஆனால், இந்த நிகழ்ச்சி நஷ்டத்தில் முடிவடைந்ததால் இதற்கு நஷ்ட ஈடாக ரூ.3 கோடி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு […]
மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ட்வீட். ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கான பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் முதலவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். […]
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் 30% மானிய விலையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நான்கு சக்கர வாகனங்களை வழங்கியுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மானிய விலையில் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் 10க்கும் மேற்பட்டோருக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் ஆட்டோ […]
சார்பட்டா முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைபடத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை, துஷ்ரா விஜயன் நடித்துள்ளார். மேலும், கலையரசன், பசுபதி, அனுபமாகுமார், சஞ்சனா நடராஜன், மேலும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் […]
தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா ? ஏழை, எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை. இதுதொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் மறைந்த முன்னாள் கருணாநிதி அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, தனியாரை நுழைய அனுமதித்து லாட்டரி சீட்டு திட்டத்தையும் சீரழித்தார். அப்போதுதான் வெளி மாநில லாட்டரிகள் தமிழ் நாட்டில் அனுமதிக்கப்பட்டது. ஒரு சீட்டின் விலை ரூ.10 […]
வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சாணுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கான பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதனையடுத்து, டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மீராபாயின் இந்த சாதனையை பாராட்டி, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், […]
மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ,உதல்வர் மு.க.ஸ்டாலின் நீர் ஆதாரங்களை அதிகரிக்க புதிய நீர் நிலைகளை உருவாக்கிடவும், மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மிக கனமழை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது இந்நிலையில், தொடர்ந்து தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தமிழகம் ஆளுநரிடம் பாமக அளித்த ஊழல் புகாரில் சம்மந்தப்பட்ட துறைகளில் விளக்கத்தை பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். கடந்த 2015ம் ஆண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக, அப்போதை ஆளுநர் ரோசய்யாவிடம் ஊழல் புகார் பட்டியல் அளித்திருந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டியிருந்தார். 2011ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா […]
இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் வெளிநாடு வாழ் தமிழர்கள், இலங்கை தமிழ் அகதிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது தலை நிமிரும் தமிழகம் என்ற திட்டப்படி வெளிநாடு வாழ் தமிழர்கள் நல துறையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை […]
பாலியல் தொல்லை புகாரில் சிறையில் அடைக்கப்பட்டியிருந்த சிவசங்கர் பாபா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டியிருந்த சிவசங்கர் பாபாவுக்கு, உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். ஏற்கனவே, உடல்நலகுறைவால் சிவசங்கர் பாபா ரஜீவகாந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
தமிழகத்தில் அக்டோபர் மாதத்திற்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, அக்டோபர் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, திருச்செந்தூரை நகராட்சியாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என கூறினார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடந்துவரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2022 மே மாதத்திற்குள் முடிவடையும். சிப்காட் தொழிற்பேட்டைகளில் சிறு தொழில்களுக்கு 20 […]
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து நூலகங்களை செயல்படுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று முதல் அனைத்து நூலகங்களையும் திறக்க பொதுநூலக இயக்குநரகம் அனுமதி வழங்கி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. கொரோனா 2வது அலை காரணமாக மூடப்பட்ட நூலகங்கள் 75 நாட்களுக்கு பிறகு திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளுக்கு தயாராவோரின் நலனை கருத்தில் கொண்டு நூலகங்கள் திறக்கப்படுகின்றன. நூலகங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் […]
இந்துமத கடவுள்கள் மற்றும் அரசியல் தலைவர்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது. கடந்த 18-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்புப் போராட்டம் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா அவர்கள் இந்து மத கடவுள்கள் குறித்தும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். இந்த […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த காலகட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை போக்க பல்வேறு தனியார் அமைப்புகள் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கி வந்தது. ஸ்டெர்லைட் ஆலை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தர தயாராக இருப்பதாகவும் அதற்கு அனுமதி […]
சென்னையில் இன்று முதல் நிமோனியா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம். குழந்தைகள் பிறந்த நாள், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, அவர்களுக்கு பிசிஜி – காசநோய், ஹெபடைடிஸ் பி – கல்லீரல் மற்றும் புற்றுநோய், ஓபிவி – இளம்பிள்ளை வாதம், இன்ப்ளூன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று உள்ளிட்டவைகளுக்கு தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன. இந்நிலையில், குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலை தடுக்கும் நியூமோகாக்கல் என்ற தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நேற்று முதல் இலவசமாக போடப்பட்டு வருகிறது. அதன்படி அரசு […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,830 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,830 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,44,870 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 130 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,862 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 2,516 பேர் […]
அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளராக வைகைச் செல்வன் மற்றும் வர்த்தக அணிச் செயலாளராக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி பா. வளர்மதி அவர்களும், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் முனைவர் வைகைச்செல்வன் அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் […]