சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 30 நாட்களுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தீர்வு காணும் நோக்கில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் மட்டும் போராட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், […]
சென்னை : ஆயுதப்பூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் 1,175 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொடர் விடுமுறை பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, இன்று முதல் அக்.13ம் தேதி வரை சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி,கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், […]
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டும், சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தொலைப்பேசியில் இவர்களுடைய கலந்துரையாடல் 5 நிமிடம் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிறந்தநாள் வாழ்த்துக்களைத் […]
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டுவரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பு உடன்பாடு எட்டினாலும், சிஐடியு தொழிற்சங்கத்தினர் உடன்பாடு எட்டப்படவில்லை எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். Read more – போராட்ட களத்தில் சாம்சங் ஊழியர்கள்., தற்போதைய நிலவரம் என்ன.? இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது […]
சென்னை : ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் சாம்சங் இந்தியா தொழிற்சாலை ஊழியர்கள் இன்றும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அமைக்க அனுமதி, ஊக்கதொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 30 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தை : ஊழியர்களின் கோரிக்கைகள், போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் […]
தமிழக அரசு நடத்தும், ஜப்பானிய மொழி கற்கும் பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க அக்-15 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை : தமிழக அரசின், நான் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் ஜப்பானிய மொழி கற்கும் புதிய பாடத்திட்டத்தை இலவசமாக கற்கலாம் என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி, ஜப்பானிய மொழியை கற்க விரும்புவோர் இதில் பதிவு செய்து பலனடையலாம். மேலும், ஜப்பானில் 18 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு இருப்பதால் அங்கு சென்று வேலையை எளிதில் […]
சென்னை : பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட மாநில கல்லூரி மாணவர் சுந்தர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி (Presidency College Chennai) மாணவர் சுந்தர் என்பவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிவிட்டது. தகவலறிந்து வந்த பெரியமேடு காவல்துறையினர் மாணவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாணவர் சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு பதியப்பட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு, […]
சென்னை : கடந்த சில நாட்களாக தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாட உணவில் தக்காளி முக்கியத்துவம் வகிக்கிறது. சைவமோ, அசைவமோ என எந்த வகை சமையலிலும் தக்காளி பயன்படுத்தப்படாத நாளே கிடையாது. தற்போது தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் ரூ.100-ஐயும் நெருங்கியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ள தமிழக அரசு, அவற்றை பண்ணை பசுமைக் கடைகளில் விற்று வருகிறது. தமிழக […]
சென்னை : லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 09.10.2024) புதன் கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை. சென்னை சத்தியமூர்த்தி நகர், […]
சென்னை : தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். முதலமைச்சர் முன்னதாக மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது அந்நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க […]
சென்னை : லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும், சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, (இன்று) 08.10.2024, மற்றும் நாளை (09.10.2024:) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி […]
சென்னை : விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்று கிழமையன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஈசாத்தி மங்கலம் பகுதியில் இருந்து பூதப்பாண்டி வரை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இந்த ஆர்எஸ்எஸ் பேரணியை கன்னியகுமாரி தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி […]
சென்னை : இன்று (அக்டோபர் 8) இந்திய விமானப்படை தினம் கொண்டப்படுகிறது. விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமை அன்று சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேஜாஸ் , ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் உட்பட 72 விமானங்களின் பிரம்மிப்பூட்டும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் பேர் ஒன்றுகூடினர். வான் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியது லிம்கா […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமை செயலலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி பிரதானமாக ஆலோசிக்கப்பட […]
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 25 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தீர்வு காண்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமையன்று, அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். இதனை அடுத்து, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் முதலில் சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு நேற்று […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 08.10.2024) செவ்வாய் கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை ஹவுசிங் போர்டு, ஆர் நகர், தம்மா நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர் […]
சென்னை : தமிழகத்தில் கிராமப்புற மக்கள் பயன்பெரும் நோக்கில் அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, அதற்கான மருந்துகள் வழங்கபடுகின்றன. இந்த திட்டம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் வழங்கபடுகின்றன. தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் (United Nation) அமைப்பு பாராட்டி விருது வழங்கியுள்ளது. இது […]
சென்னை : மெரீனா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமானப் படையின் 92-ஆவது ஆண்டு விழா சாகச் நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவர்களில் ஐந்து பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 7 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான […]
சென்னை : சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனென்றால், இந்த நிகழ்ச்சியை பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் கூட்டமாக வருகை தந்திருந்தார்கள். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், இந்த கூட்டநெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டதில் 7 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னதாக தெரிவித்து இருந்தார், இந்த சோகமான சம்பவம் […]