தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகியுள்ளது. தமிழக மாணவர்களின் தேர்வு முடிவுகளை tnresults.nic.in , dge.tn.gov.in ஆகிய அரசு இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை : தமிழகத்தில் மொத்தம் 12,616 பள்ளிகளில் இருந்து 4,57,525 மாணவர்களும் , 4,52,498 மாணவிகளும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தமாக […]
காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் மரணம் தொடர்பான விசாரணையில் தற்போது வரையிலான நிகழ்வுகளில் தொகுப்பு. கடந்த மே மாதம் 4ஆம் தேதி உவரி காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வருகிறது. அதில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த மே 2ஆம் தேதி முதல் காணவில்லை என்றும் கடைசியாக மே 2ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவரது மகன்கள் ஜெஃப்ரின் மற்றும் மார்ட்டின் ஆகியோர் இந்த புகாரை தெரிவிக்கின்றனர். […]
KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள் அடங்கிய கேஜிஎஃப் என்ற சில்லறை விற்பனைக் கடையை வைத்திருக்கிறார். மேலும் அவர் தனது கடையின் விளம்பரம் செய்து, திறமையாக பேசி மக்களை யூடியூப் மூலம் கவனம் ஈர்த்தார். இதன் மூலம் இவருக்கு அஜித் நடித்த துணிவு படத்தில் சிறிய காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடிக்கடி, சண்டை மற்றும் சர்ச்சை […]
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுரேஷ் எனபவருக்கும், சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகள் கஸ்தூரிக்கும் 8 மாதம் முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கஸ்தூரி 7 மாத காலம் கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் வளைகாப்பு நிகழ்வு நடத்துவதற்காக சுரேஷின் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு நேற்று இரவு […]
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் இந்த மண்ணில் இல்லை என்றாலும் கூட அவர் செய்த உதவிகள் எல்லாம் அவருடைய எண்ணத்தை நிலைநாட்டியே வைத்து இருக்கும். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். அதற்கு பெயர் போனவர் விஜயகாந்த். அவர் உயிரோட இருந்த பொழுதும், தற்போது மறைந்த போதும் கூட, பலருக்கு உணவு அளிக்கும் […]
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண் கஸ்தூரி என்பவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் அவருக்கு சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் […]
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி தற்போதைய எம்.பியும், மஜத கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு அவரை தற்போது போலீசார் தேடப்பட்டு வரும் நபராக அறிவித்துள்ளனர். அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை விடியோவாக எடுத்து வைத்து இருந்தார் என இவர் […]
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் , தற்போது ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலாவாசிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. மாணவர்களுக்கு கோடை விருமுறையும் ஆரம்பித்து விட்டதால் மேற்கண்ட சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் கடும் முயற்சி செய்து வருகின்றனர். ஊட்டியில் மட்டும் தினசரி சராசரியாக 20 ஆயிரம் வாகனங்கள் […]
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில் நேற்று (மே 1) நடந்த வெடிவிபத்தில், குருசாமி, கந்தசாமி, துரை ஆகிய 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் இந்த வெடி விபத்தில் காயமடைந்தனர். பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அருகில் உள்ள சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. […]
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப்போல, இந்த வெடிவிபத்தில் 8 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, சரக்கு வேனில் இருந்து குடோனுக்கு […]
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர், மருத்துவர், ஆகியவற்றினுடைய பெயர்களை ஸ்டிக்கர்காளாக அடித்து வருவது அதிகமாகி இருக்கிறது. இதனை பற்றி போலீஸார் ஆய்வு செய்தபோது பலரும் இந்த துறையில் இல்லாமலே இது போன்று ஸ்டிக்கர்கள் அடித்து வைத்து இருப்பது தெரிய வந்தது. எனவே, இதனை தடுக்கவேண்டும் என்பதால் தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது […]
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு வந்தது. நேற்றைய தினம் குவாரிக்கு கொண்டுவரப்பட்ட வெடிபொருட்களை இறக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த வெடி விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே, சேதுராமன் என்பவர் நேற்று கைதான நிலையில், தற்போது தலைமறைவாக […]
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு வந்தது. இன்று காலை குவாரிக்கு கொண்டுவரப்பட்ட வெடிபொருட்களை இறக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர், 8 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், அருகில் இருந்த 2 லாரிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், குவாரியை சுற்றி இருந்த 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. […]
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான இக்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது, மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கிரஷர் குவாரியில் வெடி வைக்கையில் இந்த விபத்து ஏற்பட்டதாக […]
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடன் உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர். இதன்பின் […]
Ammonia gas leaked : கோவை காரமடை அருகே ஓர் கிரமத்தில் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயு கசிந்தது. கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே, சென்னிவீரம்பாளையம் எனும் கிராமத்தில் 8 வருடங்களுக்கு முன்பு ஓர் சிப்ஸ் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வந்துள்ளது. அந்த நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. பின்னர் அந்த நிறுவனம் அவிநாசியை சேர்ந்த ஆஷிக் முகமது என்பவருக்கு கொடுக்கப்பட்டு உருளை சேமிப்பு கிடங்காக செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், உருளை சேமிப்பு […]
Heat wave Alert: வெப்ப அலை காரணமாக தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் இயல்பான அளவைவிட வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை உட்சபட்சத்தை தொட்டு வெப்ப அலை வீசுகிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் […]
E Pass : ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் மே 7ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்து வர வேண்டியது கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதாலும் மலை பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழலை பாதுகாக்க பல்வேறு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி குற்றசாவளி என்று தீர்ப்பு. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலா தேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை கைது செய்தது. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு தொடர்பாக மதுரை பல்கலைக்கழக உதவி […]
Senthil balaji: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாத்துறை கைது செய்தது. இதன்பின் பல்வேறு கட்ட விசாரணைகளை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது நீதிமன்ற காவலில் கடந்த ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து […]