Chennai : அடுக்குமாடிக் குடியிருப்பின் மேற்கூரையில் சிக்கி, உயிருக்குப் போராடிய குழந்தையைப் அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயின் பூம்பொழி நகரில் அமைந்து இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பச்சிளம் குழந்தை ஒன்று தவறி கீழே இருந்த தகர சீட்டில் விழுந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக முதல் மாடியின் மேற்கூரையில் விழுந்து சிக்கியுள்ளது. அந்த குழந்தை தகர சீட்டில் கீழே […]
M.K.Stalin : தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டரான குகேஷ் முதலமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார். கனடாவில் நடைபெற்ற பிடே செஸ் தொடரில் நெருக்கடியான சூழ்நிலையில் வெற்றியை தக்க வைத்து சாம்பியன் பட்டத்தை வென்றார் இளம் செஸ் வீரரான குகேஷ். இந்த சாம்பியன் பட்டத்தின் மூலம் அவர் இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று நடப்பு உலக செஸ் சாம்பியனான சீன க்ராண்ட்மாஸ்டரான டிங் […]
TN Govt: தமிழகத்தில் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள் வழங்கும் நீர்சத்து குறைபாட்டை போக்கும் மையங்களை அமைக்க உத்தரவு. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடுத்த சில நாட்கள் தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய […]
MK Stalin: குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இதனை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்ப அலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இதன்பின் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோடை காலத்தில் குடிநீர் […]
Edapadi Palnisamy: மாநில அரசு கேட்கும் நிதியை, மத்திய அரசு வழங்கியதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரத்தில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இபிஎஸ்-யிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, புயல், மழை பாதிப்புக்காக தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய […]
Rahul Gandhi : தள்ளுபடி செய்யப்பட்ட 16 லட்சம் கோடி ரூபாய் முழுதாக திரும்பி வசூல் செய்ய முடியாது என் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தற்போது நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அடுத்தகட்ட தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல தேர்தல் பிரச்சார களம் நாளுக்கு நாள் பரபரப்பாக இயங்கி […]
Flood Relief Amount : மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தற்போது 276 கோடி ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் இரு புயல்கள் தாக்கின. அதில் முதலாக மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டன. அதே போல, டிசம்பர் இரண்டாம் பாதியில் தென்தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய […]
Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். தற்பொழுது, விபத்தில் காயமடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். நாகர்கோவிலிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்து ஆசனூர் பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், போலீசார் இது விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலம் கட்டுமான பணி […]
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல், ஜுன் 5-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் 6-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் பொது தேர்வுகள் […]
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதில் குறிப்பாக சில இடங்களில் உட்சபட்ச வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். அக்னீ நட்சத்திரம் இன்னும் ஆரம்பம் ஆகாமலே தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு […]
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, அதே கல்லூரியை சேர்ந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நிர்மலா தேவி மீது 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, நிர்மலா தேவி […]
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வண்ணமே உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்ப அலை பதியாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதன்பின் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதிமன்ற காவலில் கடந்த ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் […]
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில தலைவர் சொல்வபெருந்தகையை சந்தித்து, தான் காங்கிரஸில் இணைய உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளார். தனது விருப்பம் தொடர்பாக அவர் கடிதம் ஒன்றையும் செல்வபெருந்தகையிடம் அளித்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் எனும் கட்சியின் தலைவராக மன்சூர் அலிகான் இருந்து வருகிறார். இந்த கட்சி சார்பாக […]
Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. – தேர்தல் ஆணையம். கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு இருந்தார். இவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை […]
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம் தேதி இந்த தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது சதிஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று நபர்களிடம் இருந்து சுமார் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதன்பின் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் […]
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வு நேற்று முன் தினம் (23ம் தேதி) முடிவடைந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை, […]
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய போட்டித்தேர்வாக உள்ள குரூப் 4 (Group 4) தேர்வு தேதியினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கும் காலிப்பணியிட அறிவிப்பான் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு தேதியினை TNPSC அறிவித்துள்ளது. […]
Food Safety Department : திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் அதன் […]
RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக அப்பகுதி கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழிவு நீரால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக […]