Tasmac Close : தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குத் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவு. 2024-ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் நாளை மாறு நாள் ( ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் அந்த நாள் அதாவது ஏப்ரல் 19-ஆம் தேதி அரசு விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எப்போது விடுமுறை என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தமிழகத்தில் […]
Election2024: தேர்தல் விதிகளைம் மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை மறுநாள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். மக்களவை தேர்தலை முன்னிட்டு […]
DMK: தங்களது செல்போன்கள் ஒட்டுகேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார். தமிழகத்தில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, எனது, என் மனைவி மற்றும் உறவினர்கள், நண்பர்களின் செல்போன்களை […]
Election2024: நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில், பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19 தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக அனல் பறக்க நடந்து வரும் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் நாளை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நாள் வரை உள்ள தேர்தல் […]
Election2024: “அக்கா1825” என்ற பெயரில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தென் சென்னை பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழிசை சௌந்தரராஜன், இன்று தென் சென்னை தொகுதிக்கான “அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இதன் பின் தமிழிசை சௌந்தரராஜன் […]
Election2024: இன்றுடன் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவடைய உள்ள நிலையில், நாளை பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. நாட்டில் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக வரும் 19ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் […]
MK Stalin: பாஜகவையும், அதிமுகவையும் புறக்கணிப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் 3 தினங்களில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்வு பெறுகிறது. திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு […]
PM Modi: தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலர் குழம்பி போயிருக்கிறார்கள் என்று நெல்லை பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு. மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்து சென்னை உள்ளிட்ட இடங்களில் வாகன பேரணி, கூட்டத்தில் பங்கேற்று தங்களது வேட்பாளர்களுக்கு […]
Senthil balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 32-ஆவது முறையாக நீடித்து நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதன்பின் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு, இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி தாக்கல் […]
Election2024: தபால் வாக்கு செலுத்துவதற்கு நாளை ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணியில் ஒருபக்கம் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான பணிகளில் தலைமை தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஒருவாரமாக தமிழ்நாட்டில் பூத் சிலிப் விநியோகம் செய்தல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்களிடம் தபால் […]
Election2024: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தகவல். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 39 மற்றும் புதுச்சேரி 1 என மொத்தம் 40 தொகுதிகளில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். மக்களவை தேர்தலுக்கான […]
MK Stalin: மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தேர்தலுக்கு 4 நாட்கள் உள்ள நிலையில், நேற்று பாஜக தேர்தலை அறிக்கையை பிரதமர் மோடி […]
Election2024: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தடுக்கும் வகையில் தேர்தல் பிறகும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேருந்து நிலையில், சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரது வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் […]
Nainar Nagendran: ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன். தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கையில் மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். […]
ஜெயக்குமார்: பாஜகவால்தான் நான் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என பாஜகவினர் கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார்” இவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்கள் ஆட்சியே போனது, இல்லையென்றால் நான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி […]
Sellur raju: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம். தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை காண்ட்ராக்ட் காரர்களுக்கு தாரை வார்த்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஒப்பந்தக்காரர்களுக்கான கட்சியாக மாறிவிட்டது. அதிமுக வேட்பாளர்களை பார்த்தாலே அது தெரியும் என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா […]
Jayakumar : அண்ணாமலை அதீத கற்பனையில் பேசுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் அனைவரும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று தேனி பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரப்புரை செய்தார். அப்போது அந்த பிரச்சாரத்தின் போது ” மக்களவை தேர்தல் முடிந்து அதாவது ஜூன் 4ம் […]
Annamalai : அதிமுக கட்சி டிடிவி.தினகரனிடம் இருந்தால் ஸ்டாலின் தற்போது முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என அண்ணாமலை பேசியுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால். தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக […]
DMK: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், இறுதி வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவைகள் நிறைவு பெற்ற நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் […]