தமிழக எம்.பி க்களை இடை நீக்கம் செய்ததன் மூலம் தமிழகத்தை மத்திய அரசு அவமதிப்பதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். நடைபயண முடிவில் கர்நாடகா எல்லையான ஓசூரில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த […]
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக்குவது குறித்து, கருத்து கேட்புக் கூட்டத்தை சென்னையில் ஆட்சியர் நடத்தினார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் போயஸ் தோட்ட சாலை அகலமில்லாமல் இருப்பதால் தங்களுக்கு சிரமம் ஏற்படும் என்று கூறி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதி: திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு : பின் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக […]
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில்,திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யப்படும். திடீரென தேர்தல் அறிவித்தால், மக்களை துயரங்களில் இருந்து விடுவிக்கப்படாமல் பாதிப்பு தொடரும். மழையை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைத்த ஆணையம், புயல் பாதித்த பகுதியில் நடத்துவது ஏன்? ….வறட்சியின்போது தேர்தல்களை தள்ளிவைத்த வரலாறு உண்டு; தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா […]
ஃபிளாப் மூவிக்கான ட்ரெய்லர் போன்று இருந்தது ஆளுநர் உரை என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், சட்டப்பேரவையில் சம்பிரதாயத்திற்காக ஆளுநர் உரை வாசிக்கப்பட்டுள்ளது .ஃபிளாப் மூவிக்கான ட்ரெய்லர் போன்று இருந்தது ஆளுநர் உரை . தமிழக அமைச்சர்கள் மக்களுக்காக டெல்லி செல்லவில்லை.அமைச்சர்கள் அடிக்கடி டெல்லி செல்வதன் மர்மம் என்ன.தமிழக அரசு என்னென்ன நலத்திட்டங்களை செய்தது என தெரியவில்லை.பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுக்கும் ரூ 1000 மக்களுக்கு எந்த […]
இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும் என்று சபாநாயகர் தனபால் தெரிவிதுள்ளார். சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது: நேற்று (ஜனவரி 2 ஆம் தேதி) தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது . ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை: அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.பின் முடிவு பெற்றது. இதன் பின் சென்னை […]
திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 6-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 6-ம் தேதி முடிவு செய்யப்படும் . சபரிமலைக்கு 2 பெண்கள் வேண்டுமென்றே சூழ்ச்சி செய்து சென்றுள்ளனர், அங்குள்ள ஆளும் கட்சியின் தூண்டுதலால் இது நடைபெற்றுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இன்றுடன் (ஜனவரி 3ம் தேதி) திருவாரூர் இடைத்ததேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்ப படிவத்தை ஒப்படைக்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை 3ம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் .அன்பழகன் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். வேட்பாளருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம் என்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் […]
தமிழ்நாடு தொலைநோக்கு 2023 திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என்றும் சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்தார். பேரவையில் முதல் கூட்டத்தில் பேசிய ஆளுநர் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் மூலம் நலிந்த பிரிவினருக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் உள்ளிட்டவையும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக […]
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து, காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, திருவாரூர் தொகுதி முழுவதும் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தொகுதி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டி வருகின்றனர். இதையடுத்து, நன்னிலம் காவல்துறையினர் கங்களாஞ்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனையை முறைபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிடும் வரை ஆன் லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆன் லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த இரு […]
கோவையில் 216 கோடி ரூபாய் மதிப்பில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தின் உயிர்நாடியாக உள்ளது உக்கடம் பகுதி. வெளி மாநிலங்களுக்கு செல்லவும்,மதுரை, திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கும் முக்கிய நுழைவு வாயிலாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வண்டிகளில் லட்சக்கணக்கான மக்கள் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்தநிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று 216 கோடி ரூபாய் மதிப்பில் உக்கடம் முதல் […]
உதகையில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும், அக்டோபர் இறுதி முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் இருக்கும். தற்போது, வழக்கத்தைவிட கடுமையாக பனிப்பொழிவு காணப்படுகிறது. உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியதாக குறைந்திருக்கிறது. தலைகந்தா, எச்.பி.எப், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் புல்வெளிகள் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி படர்ந்துள்ளது. கடுங்குளிரால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி […]
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகேதாட்டு விவகாரத்தில் ஜனநாயக ரீதியில் போராடி வருவதாகவும், ஆனால் மத்திய அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேகேதாட்டு விவகாரத்தை திசை திருப்பவே ரபேல் விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்பியதாக தம்பிதுரை குற்றச்சாட்டினார். மேகேதாட்டுவுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற மத்திய […]
காங்கிரஸ் – பாஜக கட்சிகள் கர்நாடக நலன் சார்ந்து செயல்படுகின்றது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணைய அனுமதியை திரும்ப பெற வேண்டும் .காங்கிரஸ் – பாஜக கட்சிகள் கர்நாடக நலன் சார்ந்து செயல்படுகின்றது. இரு தேசிய கட்சிகளும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றது.காவிரி விவகாரத்தில் காங்கிரசும் – பாஜகவும் நினைத்தால் தீர்வு காண முடியும். ஆனால் இரு கட்சிகளும் அரசியல் செய்கின்றன.தமிழகத்தில் […]
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதி: திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு : பின் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக […]
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது நானா, துரைமுருகனா, டி.ஆர்.பாலுவா என 4ம் தேதி மாலை தெரியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,திருவாரூர் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் வரும் 4-ம் தேதி மாலை அறிவிக்கப்படுவார்.சட்டப்பேரவையில் என்னென்ன அம்சங்களைப் பேச வேண்டும் என்று கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது . திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது நானா, துரைமுருகனா, டி.ஆர்.பாலுவா என 4ம் […]
திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது போட்டியிடுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் . திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு : ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும்.அதேபோல் ஜனவரி 31-ஆம் […]
ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், இறந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் இறந்த வாலிபரின் உடல் தேனீ மருத்துவக்கல்லூரியை சேர்ந்த சிறந்த மருத்துவக்குழுவை கொண்டு மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது என்று தமிழக மாசுக்கடுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் போராட்டம்: தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை: பின் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் […]