ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கன்னியாகுமரி ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக தற்போது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும்,மேலும் அங்கு ஒகி புயல் காற்று காரணமாக சுமார் 60 தென்னை மரங்கள் கிழே விழுந்துவிட்டது எனவும் தகவல் தெரிவிக்கின்றன இதே போன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஓகி புயலை அடுத்து தமிழகத்தை நோக்கி சாகர் புயல் வரும் எனவும் இந்த சாகர் புயலால் வரும் 3-ம் தேதி முதல் சென்னை,கடலூர்,நாகைபட்டினம் உள்ளிட்ட வடகடலோர பகுதிகளில் பெருமழை பெய்யும் என வானிலையாளர்கள் கணித்துள்ளனர்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. கந்துவட்டி வழக்கு பதிந்துள்ள அன்புச்செழியன் அலுவலகத்தில் ஆவணங்களை தேடி வருகின்றனர் காவல்துறையினர்.ஏற்கனவே பிடியாணை பிறப்பித்து அன்புச்செழியனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.சோதனையின் பொது கிடைத்த ஆவணங்களில் பல பெரிய புள்ளிகள் சிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம்,தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவரவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என திமுகவின் குற்றசாட்டுக்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
சாலையோரங்களில் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. திமுக சார்பில் தொடர்ந்த இந்த வழக்கின் மூலம் பேனர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போலி சாதி சான்றிதழ் பெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த சிவஜெயப்பிரகாஷ் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், தான் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போலி சாதிச்சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், ஆனால், அவர் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று அவர் தொடுத்த வழக்கில் தெரிவித்துள்ளார். கிருஷ்ணசாமி பெற்றுள்ள சாதி சான்றிதழை ரத்து […]
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற்றியுள்ளது .இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில்,தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள மரங்களை வேறொடு பிடுங்கி எறிகிறது அந்த புயல். கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி,மீ தொலைவில் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஓகி என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்து இருந்தது.இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்று […]
கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கி புயல் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒக்கி புயலாக மாற்றியுள்ளது .65 முதல் 75 கி.மீ, வேகத்தில் வீசி வரும் காற்று 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 38 மைல் வேகத்தில் ஒக்கி புயல் நகர்ந்து வருகிறது – வானிலை ஆய்வு மையம் ஒக்கி புயல் மேற்கு-வடமேற்கு திசையில் லட்சத் தீவுகளை நோக்கி நகர்கிறது அடுத்த […]
நேற்று வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக உருவெடுத்து சிலோன் அக்க்ஹி புயலாக மாறியிருக்கிறது.இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில்,தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள மரங்களை வேறொடு பிடுங்கி எறிகிறது அந்த புயல். கன்னியாகுமரியில் வீசும் பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரம் விழுந்து மின்சாரம் மற்றும் சாலை துண்டிக்கபட்டுள்ளது. தூத்துக்குடியில் நெல்லையில் கன்னியாகுமரியில்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டமானது இன்று நடைபெற்றது இதனையடுத்து அதிமுகவின் அதிகாரபூர்வ ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கான வேட்பாளராக அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக ஆட்சிமன்ற குழு இன்று அறிவித்துள்ளது.
பூவுலகின் நண்பர்கள் கண்டன அறிக்கை: நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தமிழகத்தில் அமைப்பதில் உள்ள தடைகளை நீக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை செயலாளர் சின்கா அவர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக Economic Times இன்று (29.11.2017) செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை அதிகார மீறலாகும். நியூட்ரினோ திட்டத்தை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்பே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பதிவு செய்த பொது நல வழக்கில் மதுரை உயர் […]
தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உள்ள அதிகாரங்கள் கொண்ட தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்பு தலைமைச் செயலாளர் தலைமைச் செயலகத்துக்குதான் தேவையே தவிர ஆளுநர் மாளிகைக்கு ஏன் தலைமைச் செயலாளர் என சி.பி.எம் அருணன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது போன்று ஆளுனரின் இந்த நியமனத்தை பல அரசியல் தலைவர்களும் ,பத்திரிக்கையாளர்களும் விமர்சித்து வருகின்றனர்.
கார்ட்டுனிஸ்ட் பாலா கைது செய்ததை கண்டித்து கடந்த நவம்பர் 7 ஆம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற(பங்கேற்காத) பத்திரிகையாளர் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேரை ஈரான் கடற்படையினர் கைது செய்தனர். இவர்களை மீட்டு தருமாறு தமிழக அரசுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேர் துபாயில் மீன்பிடிக்க வேலைக்கு சென்று துபாய் கடலில் மீன்பிடித்தபோது அவர்களை ஈரான் கடற்படையினர் கைது செய்தனர். தற்போது அவர்களை மீட்டு தருமாறு தமிழக அரசுக்கு அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2014 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று காதுகேளாத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை சில சமூக விரோதிகள் கூட்டு பாலியல் வல்லுறவு செய்தனர். ஆளும் அதிமுக-வின் செல்வாக்கோடு செயல்படும் இந்த சமூகவிரோத குற்றவாளிகளில் அந்த ஊராட்சியின் வார்டு கவுன்சிலரான சித்தலிங்கா என்பவரும் அடக்கம். இந்த வழக்கில் ஆரம்பம் முதல் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் உள்ளூர் ஊர்தலைவர்கள், காவல்துறை, மருத்துவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டது. சுமார் ஒருவார […]
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா தனது அம்மா எனவும் அதலால் அவர்கள் உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனை செய்யவேண்டும் எனவும் அம்ருதா என்ற பெண்மணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின் அந்த வழக்கை பெங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு பெண்குழந்தை பிறந்தது உண்மைதான் என அவரது அத்தை மகளான லலிதா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள லலிதா தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘ஜெ எனது அம்மாவின் அண்ணன் […]
குடிசை மற்று வாரியத்தின் படி வீடு ஒதுக்கப்பட்டவர்கள் அந்த வீட்டில் தாங்காமல் அதனை வாடகை விட்டுயிருந்தால் அவர்கள் உடனே அப்புறபடுத்தப்பட்டு வேறு பயனர்களுக்கு அந்த வீட்டை வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. குடிசை மாற்றுவாரியத்தால் வீடு வாங்கபெற்றவர்கள் அதனை வாடைகை விடுகின்றனர் என்கிற புகார் வந்தபிறகு இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறபித்துள்ளது. மேலும் கொன்னூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கார்ட்டூனிஸ்ட் பாலா, பாரதி தமிழன், அசதுல்லா ஆகியோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு.சென்னையில் கார்டூனிஸ்ட் பாலாவிற்கு ஆதரவாக போராடிய பத்திரிகையாளர்கள் சங்கத்தை மற்றும் பாலா மீது வழக்கு பதிவு. […]
செவிலியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு 3000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நிரந்தர வேலை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு.