அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக, தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மட்டும் இதுவரை 14.5 லட்சத்துக்கும் மேற்பட்ட செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம் ஆகிய செலவுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தையின் பெயரிலையே அருகில் உள்ள அஞ்சலகங்களில் […]
தமிழகத்தில் மட்டுமே டெங்குவால் மாதம் 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆண்டு இல்லாத வகையில் இந்தாண்டு இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் இதுவரை 1.40லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 216 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டெங்குவால் தமிழகத்தில் 20141பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பேருந்துகளின் சாதாரண நாட்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என அனைவரும் அரசு பேருந்துகளில் பயணிப்பதால் கூட்டம் அலைமோதும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு வருவார்கள். இதனால் நிறைய விபத்துகளும் நடந்துள்ளன. நிறைய மாணவர்கள் இறந்துள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து அமைத்து தர பொதுமக்களும், பிற பொது அமைப்புகளும் அவ்வபோது அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து அமைக்கும் பொருட்டு வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் நீதி மன்றத்தில் […]
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு நேற்று இரு அரசு மருத்துவர்களுக்கு சoம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் ஓய்வு பெற்ற முன்னால் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிசன் முன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர்கள் விசாரணைக்கு வந்தனர். அதில் ஒருவர் ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் நாராயனபாபு, இன்னொருவர் மருத்துவத்துறை இயக்குனர் மயில்வாகனன் ஆவர்.இவர்கள் இருவரும் இன்று காலையில் விசாரனை கமிசன் முன்பு ஆஜராயினர்.
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன. ஒரு சில கல்லூரிகளை தவிர. இதில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் குளறுபடி அதிகமாக இருந்து வந்தது. செமெஸ்டர் பரிட்சையில் தோல்வி அடைந்து, மறுகூட்டலில் அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவர்கள் ஏராளம். பேராசிரியர்களின் இந்த மெத்தன போக்கை இப்பொது அண்ணா பல்கலைகழகம் இதனை கண்டுபிடித்துள்ளது. இதனையடுத்து 1,169 பேராசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. இதன் விசராணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் இரு அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களை விசாரணை கமிசன் வெளியிட மறுத்துள்ளது. விசாரணைக்கு தொந்தரவு வரும் என கூறி அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துள்ளது. சம்மன் அனுப்பப்பட்டுள்ள இரு மருத்துவர்கள் நாளை தங்களது ஆய்வறிக்கையை நேரில் வந்து சமர்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்கியதும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் தமிழகம் , கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்து சபரிமலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இங்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளித்துவிட்டு வேட்டி, துண்டுகளை ஆற்றிலேயே விட்டுவிடுகின்றனர். இதனால் பம்பை ஆற்றில் துணிகள் நிறைந்து அசுத்தம் அடைகிறது. இதனால் கேரளா உயர்நீதிமன்றம் இதனை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. ஆதலால் கோவில் நிர்வாகம் பம்பை ஆற்றில் உள்ள துணிகளை அப்புறப்படுத்தி தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சருத்திபட்டியில் உள்ள […]
சசிகலா மற்றும் TTV.தினகரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகள் அலுவலகங்கள் என மொத்தம் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. இன்று வருமான வரித்துறை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ரூ.1430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் பினாமிகள் வெளியாட்களாக இருப்பதால் அவர்கள் யார் […]
மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. அதனை விசாரணை கமிசன் அமைத்து கண்டறியவேண்டும் என பல்வேறு கட்சியினரும், தொண்டர்களும், கூறிவரும் நிலையில் தற்போது விசாரணை கமிசன், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக தெரிகிறது. மேலும் முதல்வர், துணை முதல்வர், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் என எல்லோரையும் விசாரிக்க உள்ளதாக் தெரிகிறது.
இந்த ஆண்டு விவசாயத்திற்காக 63 டிஎம்சி நீரை திறந்துவிட கோரி கர்நாடக மாநிலத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. ஏற்கனவே காவிரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் இந்த கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.
சசிகலா மற்றும் TTV.தினகரன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்கள் என அவர்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் அவர்களது உறவினர்கள் பலரது வீட்டில் சோதனை நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.1,480 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும், கணக்கில் வராத தங்கம்-வைர நகைகளும், கோடிக்கணக்கில் பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் […]
சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்களுக்கு மத்திய அரசாங்கம் வரியை குறைத்துள்ளது. அதில் ஹோட்டல்களுக்கு 18% வரியானது 5%ஆக குறைந்துள்ளது. இருப்பினும் பல ஹோட்டல்களில் இன்னும் விலை குறைப்பு செய்யாமல் உள்ளனர். அதலால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் சென்னையில் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை பாண்டிபஜாரில் உள்ள 2 ஓட்டல்களில் இட்லி, வடை, கேசரி, குலோப் ஜாமூன் போன்றவை சாப்பிட்டார். பின் சரக்கு சேவை வரி சரியாக வசூலிக்க […]
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்தந்த அடிப்படையில் பணிபுரியும் (PRTC) ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் தரத்தை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 18 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். இப்போராட்டம் இன்னும் 4வது நாளாக தொடர்கிறது. மேலான் இயக்குனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட போதும் இந்த போராட்டம் தொடர்கிறது. தங்களை தினக்கூலியாக மாற்றும் வரை இப்போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
வைகையாற்றில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் இன்று மேலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து மிகுந்த பாதிக்கப்பட்டது. பின்னர் இன்னும் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிக்கை விடுத்ததன் பின்னர், இப்ப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் இந்த 7 நாட்கள் தண்ணீர் பத்தாது எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி மற்றும் முதலமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்,ஆகிய இருவரும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை நீதிபதியின் முன்வைத்தனர். மேலும், திமுக […]
நாசரேத் அருகே மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் செல்வின் தலைமை வகித்தார். நாசரேத் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், பயிற்சி எஸ்ஐ ரகுபதி பாலாஜி ஆகியோர் பேசினர். மேலும் பாதுகாப்பு பயணத்திற்கான உறுதிமொழி படிவத்தை பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கையொப்பம் வாங்கிவருமாறு அறிவுறுத்தினர். விழா முடிந்ததும் தலைமை ஆசிரியர் ஜான் செல்வராஜ் நன்றி கூறினார்.
தென்னிந்திய திருச்சபையின் (CSI) பெண்கள் ஐக்கிய மாநாடு இந்தமுறை மூன்று நாள் மாநாடு திருச்சியில் தொடங்கியது. இது பிஷப் ஹீபர் கல்லூரியில் கடந்த 17ம் தேதி துவங்கியது. இந்த மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த மாநாட்டை திருச்சி-தஞ்சாவூர் டயோசஸ் நடத்தியது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று சிஎஸ்ஐ பெண்கள் ஐக்கிய பொதுச்செயலாளர் சிந்தியா ஷோபா ராணி வழிகாட்டுதல் வழங்கினார். டோர்னகால் டயோசஸ் தலைவர் சுவந்தா பிரசாத் ராவ் துவக்கி வைத்தார். தமிழ் […]
திருச்சி : விராலிமலை ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு செல்லும் வழியில் போலீசார் லாரியை மடக்கி பிடித்தனர். நேற்று திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கைகாட்டி அருகே உள்ள சொரியம்பட்டி விளக்கில் வளநாடு போலீசார் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்த போது இது கண்டுபிடிக்கபட்டது. அந்த வண்டியை மடக்கி பிடித்து விசாரித்ததில் இன்னொரு டிப்பர் லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.பின்னர் அதனையும் அந்த பகுதி போலீசார் மடக்கி பிடித்தனர். […]
சசிகலா T.T.V.தினகரன் ஆகியோருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். மொத்தம் 180 இடங்களுக்கு மேல் சோதனை செய்தனர். இதில் சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையும் ஒன்று. தமிழக அரசின் டாஸ்மாக் தனக்கு தேவையான மதுபானங்களை மொத்தம் 11 இடங்களில் இறக்குமதி செய்கிறது. இதில் மிடாஸ் நிறுவனத்தில் தான் அதிகமாக கொள்முதல் செய்யபடுகிறது. வருமானவரித்துறையின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக இப்போது டாஸ்மாக் தனது கொள்முதலை மிடாஸ் நிறுவனத்தில் செய்வதை நிறுத்தி விட்டது. இதற்க்கு […]
பெரம்பலூர்: ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் ராமலிங்கம் இவரது பைக்கை கடந்த 13ம் தேதியன்று தனது வீட்டின் பின்புறம் நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பதட்டமடைந்த அவர், இதுகுறித்து மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். அவர் புகார் தெரிவித்ததன் பெயரில் சப்.இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப் பதிந்து உடனே கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த துரையப்பன் மகன் அசோக்ராஜ் மற்றும் மீன்சுட்டி அருகில் உள்ள […]