சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,82-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஆகஸ்ட் 11) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போன்று உலகளாவிய போட்டிகளை தமிழகத்தில் நடத்த அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும். உங்கள் அன்பான பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி. விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழ்நாட்டிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதை பாராட்டிய பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் பதிவிட்டுள்ளார். இதற்கு […]
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரிப்பணத்தில் 4,758 கோடி பங்கு நிதியை தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது. ஜி.எஸ்.டி வரி பங்கீட்டில் , அந்தந்த மாநிலங்களுக்கு, மத்திய அரசு அதன் வரி பங்கு தொகையினை மாதந்தோறும் விடுவிப்பது வழக்கம். அந்த வகையில், மாதந்தோறும், 58,332 கோடி ரூபாய் பங்கு தொகையாக மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும். அந்த வகையில் கடந்த 2 தவணை பங்காக, 1.16 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுத்துள்ளது. இதில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரிப்பணத்தில் 4,758 […]
மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் மாநில விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறந்த மாவட்ட ஆட்சியராக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நாகப்பட்டினம் ஆட்சியர் அருண் தம்புராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த மருத்துவராக நாகபட்டினத்தை சேர்ந்த டாக்டர்.ஜெய்கணேசன் மூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகள் (மாவட்ட ஆட்சியர் தவிர) 2022 ஆம் ஆண்டு […]
ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த 12 நாட்களாக பிரமாண்டமாக நடைபெற்று நேற்று நிறைவு பெற்றது. உலக முழுவதும் உள்ள பல நாடுகள் பங்கேற்ற செல் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக நடத்தி தமிழக அரசு முடித்து. இதற்கு தொடக்க விழா, நிறைவு விழா நடத்தி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்திய […]
இலங்கை, முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் , குறிப்பாக, நாகை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது. தற்போதும், அதே போல, நாகபட்டினம் பகுதி மீனவர்கள், இலங்கை எல்லையில் உள்ள முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் […]
பீகாரில் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என முதல்வர் ட்வீட். பீகார் மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்த திடீர் அரசியல் திருப்பம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம்வெளியேறியதால், முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகைக்கு சென்று பீகார் ஆளுநர் பகு சவுகானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதன்பின், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் […]
அண்ணாமலை ஒன்றும் ஆளுநரின் செயலாளரோ, செய்தி தொடர்பாளரோ அல்ல என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் மாளிகையில் ஆளுநரை ரஜினி சந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது?, ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி தெரிவித்ததால் என்ன தவறு எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக ஆளுநரை திரு ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்துள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து […]
இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும், இதுதொடர்பாக செய்திகளை தெரிந்துகொள்ள இதனை க்ளிக் செய்யவும்: கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய உத்தரவு – நீதிபதி அப்போது, அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் […]
பீகாரின் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகிய நிலையில், நேற்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று எட்டாவது முறையாக பீகார் மாநில முதல்வராக நிதீஷ்குமார் பதவி ஏற்றுள்ளார். பாட்னாவில் ராஜ் பவனில் நிதீஷ் குமாருக்கு ஆளுநர் பகு சவுக்கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா […]
பொதுக்குழு ஒப்புதலின்றி இரு பதவிகள் செல்லாது எனில் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலும் செல்லாததாகிவிடுமா? அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விறுவிறுப்பாக இருதரப்பின் காரசார விவாதங்களுடன் நடைபெற்று வருகிறது. அப்போது, மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன்? என்றும் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? என்பது குறித்தும் விளக்க வேண்டும் எனவும் இ.பி.எஸ். தரப்புக்கு கேள்வி எழுப்பப்பட்டது. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் ஒருங்கிணைப்பாளர், இணை […]
புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் விபத்து நடந்த சமயம், பணியில் இருந்த கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டையில் பிரபலமாக இருக்கும் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பக்கமாக சரிந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர். மேலும், அரிமளம் எனும் ஊரை சேர்ந்த ராஜகுமாரி எனும் 64 வயது மூதாட்டி படுகாயமுற்று அரசு […]
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன் ? என கேள்வி. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாக பின்பற்றவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் எனக் கூறிவிட்டு, அந்த […]
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு. மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை, வெளிநாட்டவரும் வியக்கும் வகையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ள தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை, வெளிநாட்டவரும் வியக்கும் வகையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ள தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகளைத் தெரிவித்துக் […]
பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாக பின்பற்றவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதாடி வருகிறார். அப்போது, இருபதவிகளும் காலியாக இருந்தால் பொதுக்குழுவை கூட்ட யாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுக தலைமை […]
கோவையில் BMW சொகுசு காரில் இருவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா போன்ற போதைப்பொருள் விநியோகத்தை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து காவல்துறை கட்டுப்படுத்தி வருகிறது. இருந்தாலும், இளைஞர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கும், இந்த கஞ்சா தினமும் பல்வேறு இடங்களில் பிடிபடுவது வேதனைக்குரியதாக இருந்தாலும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மன ஆறுதலையும் தருகிறது. இந்நிலையில், நேற்று போலீசார் கோவை, சாய் […]
பொறியியல் படிப்புகளில் சேர சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு என அறிவிப்பு B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் சேர விண்ணப்பித்த விளையாட்டு வீரர்கள் யாரேனும், இதுவரை நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காவிட்டால் வரும் 12-ம் தேதி மீண்டும் பங்கேற்கலாம் என்று TNEA (தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை) அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர பள்ளிகள் வாயிலாகவும், சிறப்பு மையங்கள் மூலமாகவும் கடந்த 27ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதன்பின், பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்காக 1 […]
பொதுச் செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதம். சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகியோர், கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார். இதனையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, […]
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக தான் காரணம் என சசிகலா பேட்டி. அதிமுகவில் மிகப்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓபிஎஸ் ஒரு பிரிவாகவும், ஈபிஎஸ் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்ற்னர். இந்த நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள சசிகலாவிடம், பாஜகவின் அழுத்தம் தான் அதிமுகவின் பிளவிற்கு காரணமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 40 வருடமாக அதிமுகவில் இருந்துள்ளேன். எல்லா அரசியல் சூழல்நிலைகளையும் பார்த்துள்ளேன்; இதன் பின்னணியில் திமுக இருப்பதாக கருதுகிறேன். […]
போதைப்பொருள் விற்போருக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தல். சென்னை கலைவாணர் அரங்கில் போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், போதைப் பொருளை பயன்பாட்டை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருளை கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி நியமிக்கப்படுவார். வெளி […]