தமிழகத்துக்கான வரி பங்கில் 4,758 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு.!

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரிப்பணத்தில் 4,758 கோடி பங்கு நிதியை தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரிப்பணத்தில் 4,758 கோடி பங்கு நிதியை தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது.

ஜி.எஸ்.டி வரி பங்கீட்டில் , அந்தந்த மாநிலங்களுக்கு, மத்திய அரசு அதன் வரி பங்கு தொகையினை மாதந்தோறும் விடுவிப்பது வழக்கம்.

அந்த வகையில், மாதந்தோறும், 58,332 கோடி ரூபாய் பங்கு தொகையாக மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும். அந்த வகையில் கடந்த 2 தவணை பங்காக,  1.16 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுத்துள்ளது.

இதில்,  தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரிப்பணத்தில் 4,758 கோடி பங்கு நிதியை தற்போது மத்திய அரசு விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.