அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக தான் காரணம் என சசிகலா பேட்டி. அதிமுகவில் மிகப்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓபிஎஸ் ஒரு பிரிவாகவும், ஈபிஎஸ் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்ற்னர். இந்த நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள சசிகலாவிடம், பாஜகவின் அழுத்தம் தான் அதிமுகவின் பிளவிற்கு காரணமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 40 வருடமாக அதிமுகவில் இருந்துள்ளேன். எல்லா அரசியல் சூழல்நிலைகளையும் பார்த்துள்ளேன்; இதன் பின்னணியில் திமுக இருப்பதாக கருதுகிறேன். […]
போதைப்பொருள் விற்போருக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தல். சென்னை கலைவாணர் அரங்கில் போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், போதைப் பொருளை பயன்பாட்டை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருளை கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி நியமிக்கப்படுவார். வெளி […]
செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்திய முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியானது நேற்றுடன் நிறைவு பெற்றது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர்களின் கலாச்சாரம், விளையாட்டுகள் தோன்றிய வரலாறு, தமிழர்களின் வலிமை ஆகியவை தத்ரூபமாக சித்தரித்துக் […]
நேற்றை போல, இன்றும் வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவைக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அதிகமான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழை எப்போது தான் தீருமோ என பொதுமக்களும் பார்த்து வருகின்றனர். அனால் விடாத கனமழை தொடர்ந்து பெய்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில், தற்போது வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, […]
அதிக வட்டி தருவதாக கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்ய கூடாது என பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு அறிவுறுத்தல். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன், வேலூர் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் ரூ.4,380 கோடி மோசடி செய்துள்ளது. ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மோசடி தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், ரூ.4,380 கோடி மோசடி என்பது தற்போது சுமார் ரூ.6,000 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார். இதுபோன்று […]
வரும் காலத்தில் ஓ.பி.எஸ் உடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது என டிடிவி தினகரன் பேட்டி. அதிமுகவில் தற்போது மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனி தனியாக பிரிந்து உள்ளனர். இந்த நிலையில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், வரும் காலத்தில் ஓ.பி.எஸ் உடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி. ஊடகங்களுக்கு தான் பா.ஜ.க எதிர்க்கட்சி. நிஜத்தில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் தான் எதிர்க்கட்சி. எங்களை மதிக்கும் தேசிய […]
போதைப் பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல். தமிழகத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வு வரமாக கடைபிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஏ அணிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. போட்டிகளை உலகமே […]
ரஜினியிடம் ஆளுநர் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என அண்ணாமலை கேள்வி. சென்னை நீலாங்கரையில் தேசிய கொடியுடன் கடலில் பயணம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உணர்ச்சிபூர்வமாக தன்னுடைய நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை பெருமிதமாக கொண்டாடுவதற்காக தேசிய கொடியை நமது இல்லத்தில் ஏற்றுகின்றோம். ஜம்மு காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசிய கொடி தான் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் ஏற்றவுள்ளோம். இதுபோன்று ஒவ்வொரு விஷயத்தையும் பல இந்தியர்கள் […]
விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என மநீம அறிக்கை. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.33 […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்தது , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,893 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,893 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.56 குறைந்து, ஒரு சவரன் […]
தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது என கனிமொழி எம்.பி ட்வீட். முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது. இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது. அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாளும் […]
இன்று புதுசேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், ஆளுநர் உரை முடிந்ததும் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லி சென்ற புதுசேரி முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அதில், புதுசேரி பட்ஜெட் தாக்கல் செய்ய 200 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று நடந்த புதுசேரி சட்டப்பேரவையில், ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தமிழில் உரையாற்றினார். மத்திய அரசிடம் இருந்து, நிதியை முறையாக […]
செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடத்தியதற்காக தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். 12 நாட்களுக்கு பின் நேற்றுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிநிறைவடைந்தது. இந்த நிலையில், இதன் நிறைவு […]
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் சந்திப்பு. சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் சந்தித்து பேசி வருகிறார். ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி நடவடிக்கைக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி என்று கூறப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,81-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஆகஸ்ட் 10) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று, மாவட்ட ஆட்சியர்களும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்ட்ராவை விட தமிழ்நாடு […]
அமமுகவில் கூடுதல் துணை பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் நியமித்து டிடிவி தினகரன் அறிவிப்பு. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளராக C.சண்முகவேலு (முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளர்), தலைமை நிலையச் செயலாளராக வீரபாண்டி S.K.செல்வம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சேலம் மத்திய மாவட்டக் கழக செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். இதுவரை கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்த […]
காமன்வெல்த் வாள்வித்தை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்றார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்பில் மகளிர் சேபர் தனிநபர் பிரிவில் வாள்வித்தை போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். இதனிடையே, இங்கிலாந்தில் நடைபெற்று வந்த 2022-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா 4-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தது. இதனைத் […]
தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் . சென்னை கலைவாணர் அரங்கில் இன்று, மாவட்ட ஆட்சியர்களும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் .