செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதில் பெரிதும் உதவிய காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களுக்கு பிரியாணி விருந்து அளித்தார். கடந்தமாதம் ஜூலை 28ஆம் தேதி சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி வெகு கோலாகலமாக தொடங்கி , கடந்த 10ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த விழாவில் பல்வேறு நாட்டு செஸ் வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்கள், போட்டி நடைபெற்ற இடங்கள், மற்ற பொது இடங்கள், அரசியல் பிரபலங்கள், விஐபிகளின் பந்தோபஸ்து […]
ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர் லட்சுமணன் உயிரிழந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி இரங்கல். ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது […]
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட முடியாது. ஆர்எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை ரத்து கோரி எஸ்பி வேலுமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.
ராணுவ முகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலியல் தமிழக வீரர் லஷ்மணன் வீர மரணம். ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், […]
தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் என ப.சிதம்பரம் ட்வீட். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்றுதெரிவித்திருந்தது குறித்து ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தந்தை ஈ வெ ரா […]
ஆவணங்களை தாக்கல் செய்ய நாளை மாலை வரை ஓபிஎஸ், ஈபிஸ் தரப்புகளுக்கு நீதிபதி அவகாசம். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், ஈபிஸ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ், ஈபிஸ் தரப்பு வாதங்களை 2 நாட்களாக கேட்ட நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயசந்திரன். நேற்று ஓபிஎஸ், […]
ஆளுநரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் உரிமை உள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். ஆளுநரை சந்தித்த பின் பேட்டியளித்த ரஜினிகாந்த், ஆளுநரிடம் அரசியல் பேசியதாகவும், ஆனால் அதுபற்றி தற்போது பேச இயலாது என்றும் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் பேச்சிற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட பின் புதுச்சேரி துணைநிலை […]
பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸுக்கு ஆதரவாக உள்ளார்களா? என நீதிபதி கேள்வி. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு நடைபெற்று வருகிறது. அப்போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸுக்கு ஆதரவாக உள்ளார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு, 2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை மட்டும் வைத்து ஒட்டுமொத்த 1.50 கோடி தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். பொதுக்குழு குறித்து தொலைகாட்சி, பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்வது […]
அனைத்து மக்களின் வாழ்விட உரிமையை பாதுகாக்க கிராம சபைகள் உறுதியேற்க செய்திட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். சுதந்திரத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களில் விவாதிக்க வேண்டிய பொருள்களின் பட்டியலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் சுற்றறிக்கையில் அனுப்பியுள்ளார். அதில், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் ட்விட் செய்துள்ளார். சுதந்திரத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறவுள்ள […]
பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு செய்யும் கருப்பு என்று சு.வெங்கடேசன் ட்வீட். பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை சொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது, அதுதான் கருப்பு என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நாடாளுமன்றத்தில் 5-ஆம் தேதி கருப்பு ஆடை அணிந்து போராடியவர்களை வசைமாரி பொழிந்திருக்கிறார் பிரதமர். ஒரு வாரம் ஆகிவிட்டது. போராடிய எல்லோரும் தொகுதிகளுக்கு வந்துவிட்டோம். ஆனாலும், பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு […]
பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசியக் கொடியேற்ற பாதுகாப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் பட்டியலின பெண் ஊராட்சித் தலைவர் ஒருவர் தேசியக்கொடியேற்ற பாதுகாப்பு கோரி காவல்துறைக்குக் கடிதம் எழுதிய விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வரதராஜி, டிஎஸ்பி-க்கு எழுதிய கடிதத்தில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஊராட்சித் தலைவரான தான், தீண்டாமை […]
விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளில் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படாதது குறித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளில் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் விசைத்தறி நெசவாளர்கள் போதிய வேலைவாய்ப்பின்றி […]
தேசிய கொடி இயக்கம் மூலமாகவும் பிரதமர் மோடி காசு பார்க்கிறார் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். வரும் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசப்பற்றிற்கும், பாஜகவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே எதற்கு இந்த தேசியக்கொடி இயக்கம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இதிலும் காசு பார்க்கிறார் மோடி! அவமானம்.’ […]
ஒற்றை தலைமைதான் தேவை என்பது பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம் என ஈபிஎஸ் தரப்பு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று இரண்டாவது நாளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி ஜெயசந்திரன் முன்பு ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடி வருகிறார். நேற்று ஓபிஎஸ் தரப்பு, வைரமுத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், […]
இன்று போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழா சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை வழிநடத்தி வருகிறார். போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி தொடங்கி வைத்தார். பின்னனர் அவர் தனது உரையை தொடங்கினார். அதில், ‘ போதை பழக்கத்தால் உடல் நிலை கடுமையாக […]
தமிழகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.264 குறைந்துள்ளது. இன்று ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ..264 குறைந்து ரூ.38,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1கிராம் தங்கம் ரூ.33 குறைந்து ரூ.4860க்கும் விற்பனையாகிறது.சென்னையில் தங்க நகை விலை மீண்டும் 38 ஆயிரமாக குறைந்ததுள்ளது. தங்கத்தை போலவே வெள்ளியும் விலை குறைந்துள்ளது, ஒரு கிலோ வெள்ளி ரூ. 64,000க்கும், ஓரு கிராம் வெள்ளி ரூ.64.00காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுறது. தொடர்ச்சியாக ஏற்றத்தை கண்ட தங்கம் இன்று குறைந்துள்ளது சற்று ஆறுதலை […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்தளித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து 12 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவு […]
அதிமுக பொதுக்குழு விதிப்படிதான் கூட்டப்பட்டது என ஈபிஎஸ் தரப்பு வாதம். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை 2வது நாளாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. நேற்று ஓபிஎஸ் தரப்பு, வைரமுத்து தரப்பு முடிந்த நிலையில், இன்று ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் தொடர்கின்றன. உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன்? என்றும் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? என்பதை விளக்குமாறு நேற்று […]
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,82-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஆகஸ்ட் 11) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போன்று உலகளாவிய போட்டிகளை தமிழகத்தில் நடத்த அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும். உங்கள் அன்பான பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி. விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழ்நாட்டிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதை பாராட்டிய பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் பதிவிட்டுள்ளார். இதற்கு […]