சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு. சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பானது, மரியாதையினிமித்தமான என ஆளுநர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விடியா அரசு தடுமாற்றம் என செல்லூர் ராஜூ விமர்சனம். மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , 2024 மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அதிமுக முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விடியா அரசு தடுமாற்றத்தில் உள்ளது. வருமானவரி, அமலாக்கத்துறை சோதனைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அஞ்சுகிறார். […]
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,79-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஆகஸ்ட் 8) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம் என பதிவிட்டுள்ளார். Heartiest congratulations to our Chess Legend […]
நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டம். ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நீட் முடிவுக்கு பின் பல மாணவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறலாம் என்பதால் கலந்தாய்வு தள்ளி போகிறது. எனவே, விரைவில் […]
கள்ளக்குறிச்சி நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை. கள்ளக்குறிச்சி புக்கிரவாரி புதூரில் உள்ள லோகநாதன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் பூட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புக்கிரவாரி அருகே விளைநிலத்தில் நகைகள் சிதறி கிடந்த நிலையில், மாவட்ட எஸ்பி தலைமையிலான குழு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக அறிவித்திருந்தது. மேலும், நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், புதிய பாடத்திட்டத்திற்கு வரும் […]
தகைசால் தமிழர் விருது பெறவுள்ள நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகைசால் தமிழர் விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. அதன்படி, சுதந்திர தின விழாவில் ஆர்.நல்லக்கண்ணுக்கு விருது வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் கவுரவிக்க உள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுதந்திர போராட்ட வீரரும் […]
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீசார் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதோடு அவர்களிடம் இருந்து கஞ்சாக்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீசார் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக […]
யாரேனும் புலன் விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி எச்சரிக்கை. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவி ஒருவர், கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதன்பின் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளி வாகனங்கள், பள்ளியில் இருந்த சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், வீடியோ ஆதாரங்களை கொண்டும், சிசிடிவி காட்சிகளைக் […]
நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் , அதற்கு ஏற்றார்போல, எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதன் படி,நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது […]
தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான நல்லகண்ணு தேர்வு. தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகைசால் தமிழர் விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. அதன்படி, சுதந்திர தின விழாவில் ஆர்.நல்லக்கண்ணுக்கு விருது வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் கவுரவிக்க உள்ளார். தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் படுபட்டவர்களை கவுரவிக்கும் வகையில் தகைசால் தமிழர் விருது […]
மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைச் சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு முதல்வர் வாழ்த்து. கொலம்பியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் U/20 தடகளப் போட்டியின் மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு வீரர் செல்வ பிரபு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் […]
பிங்க் வண்ணம் பூசப்பட்ட பேருந்துகளை அறிமுகப்படுத்தி வைத்த சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து பெண்கள் இலவசமாக பயணித்து வந்த நிலையில், தமிழகத்தில் கட்டணப் பேருந்தா அல்லது இலவச பேருந்தா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை பிங்க் நிறத்தில் வண்ணம் பூசி முதல் கட்டமாக 60 பேருந்துகள் நடைமுறைக்கு […]
மும்முறைத் தாண்டுதலில் முதன்முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கும் செல்வ பிரபுவுக்கு வாழ்த்துக்கள். U20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செல்வ பிரபு, மும்முறைத் தாண்டுதலில் (triple jumper) வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். U20 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய டிரிபிள் ஜம்பர் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார். செல்வ பிரபு மும்முறைத் தாண்டுத போட்டியில் 16.15 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை […]
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான விசாரணையில் மருது அழகுராஜ் ஆஜரானார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்று நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணையில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜரானார். கோடநாடு வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல […]
மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை முதல்வர், மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு பரிசு மற்றும் விருதுகளை வழங்கினார். இதன்பின் இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் 1997-ஆம் ஆண்டு முன்னாள் […]
தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் ஒரு வார்டுக்கு 10 என 200 வார்டுக்கு 2 ஆயிரம் முகாம் நடைபெற உள்ளது.
நாளுக்கு நாள் பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி. பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி இன்று திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி செல்கிறது. பாஜகவில் உள்ள ஒவ்வொருவரின் கடமையும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வளர்ச்சி தான். திமுக, காங்கிரஸின் நோக்கம் அவர்களது குடும்பத்தை வளர்ப்பது தான் என கூறினார். 5ஜி ஸ்பெக்ட்ரம் […]
மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு விருது வழங்கினார் முதல்வர். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அப்போது மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை முதல்வர் வெளியிட்டார். இதனையடுத்து, மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு பரிசு மற்றும் விருதுகளை வழங்கினார் முதலவர். அதன்படி, மாநில மனித […]