உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பணி நியமனத்தை டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ளும் என அரசு அறிவிப்பு. உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு, இனி அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்பணி நியமனத்தை மேற்கொள்ளும் என அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போதைய காலத்தேவை, தற்போது ஏற்பட்டுள்ள சமூக ஊடகத்தின் வீச்சு, நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப, மக்கள் தொடர்பு மற்றும் களவிளம்பரங்கள் செய்யப்பட வேண்டியதன் […]
வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டிடம் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவு. தஞ்சை சாஸ்த்ரா கல்வி நிறுவனம் நீர்நிலையில் அமைந்துள்ளதா? என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டிடம் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலையில் அமைந்துள்ளதால் மாற்று இடம் வழங்க அனுமதிக்கும் அரசாணை பொருந்தாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு […]
காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு சசிகலா வாழ்த்து. காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். பி.வி.சிந்து காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில், பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து சசிகலா ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘காமன்வெல்த் பேட்மிண்டன் […]
சண்முகசுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணம் அறிவிப்பு. சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து கத்திப்பாராவில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி தூண் மீது மோதி ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சண்முகசுந்தரம் என்கிற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சண்முகசுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணமும் […]
பொறியியல் கலந்தாய்வு 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது. விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் […]
உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அமராவதி நகரில் சகோதரிகள் இருவர் வீட்டில் புதைத்து வைத்து கஞ்சா விற்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக்த்தில் கஞ்சா விற்பனை தற்போது அதிகரித்து வருவதை நாம் தினமும் செய்திகள் வாயிலாக பார்த்து வருகிறோம் . அதே போல, அதனை தடுக்க அரசு, காவல்துறையினர் மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி, அன்மையில் தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, கஞ்சா விற்று வந்த சகோதரிகள் இருவரை கைது செய்துள்ளனர். திருப்பூர் […]
தமிழக துணைவேந்தர்கள் மாநாடு ஆக.17 நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. வரும் 17ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் உள்ள துணைவேந்தர்கள் மாநாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளது. நான் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில் பாடத்திட்டம் செயல்படுத்த துணைவேந்தர்கள் மாநாடு என்றும் மாநில அரசின் உரிமைகளை பயன்படுத்தி துணைவேந்தர் மாநாடு நடைபெறுவதாகவும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒன்றிய அரசுக்கு குஜராத்தான் கண்ணு. அந்த கண்ணுக்கு வெண்ணெய். தமிழ்நாட்டிற்கு சுண்ணாம்பு என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. […]
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக்கூடாது என அறிவுறுத்தல். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்ய புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது அதில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக்கூடாது. அரசியல் தொடர்பில் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய […]
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் பழங்காலத்தில் உபயோகப்படுத்திய தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள், அரசர்கள் உபயோகித்த பொருட்கள், இடங்கள், தடையங்களை ஆய்வு செய்யும் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகித்த செப்பு கிரீடங்கள், அம்புகள் ஆகியவை தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது இந்த அகழ்வாய்வில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அகழ்வாராய்ச்சி குழு அறிவித்துள்ளது.
உள்துறை அமைச்சரே. வருமானம் இரட்டிப்பாகுமா? பண வீக்கம் உண்மை மதிப்பை சரித்து இரட்டிப்பாக்குமா? சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என திட்டமிடப்பட்ட இலக்கை அதற்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்து முடிக்கும் என்று தெரிவித்திருந்தார். இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், அமித்ஷா பேசிய […]
தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் மைதானம் , உடற்பயிற்சி உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன – உயர்நீதிமன்றம் கேள்வி. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ/ மாணவிகளுக்கு முறையான உடற்பயிற்சி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, இது குறித்த விசாரணையில் இன்று கருத்து கூறிய உய்ரநீதிமன்றம், முதலில் தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் மைதானம் , உடற்பயிற்சி உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன, என கேள்வி எழுப்பியது? இது குறித்து, அரசு அறிக்கை தாக்கல் செய்ய […]
இந்த மொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்று எப்போதும் சொன்னது கிடையாது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி. நடிகர் அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா என்ற திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் அதற்கான உரிமையை பெற்று வெளியிடுகிறது. இந்த நிலையில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில், இந்தி திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதுகுறித்து சர்ச்சையான கருத்துக்கள் எழுந்து […]
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோரின் மனு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் வழக்கை நாளை மறுநாள் ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். அதன்படி அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ பி எஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை புதன்கிழமை 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்க டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் வரவுள்ளதால் ஒத்திவைக்குமாறு ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. ஓபிஎஸ் தரப்பு […]
தமிழக ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார். அதன் பின்னர் அந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இன்று காலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு சென்னை , கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்ததும், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதாவது உள்ளே அரசியல் […]
நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை. சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசின் மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு இருந்த நிலையில், இதனை விசாரிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும் கேப்டன் தோனி. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், நாளை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கிரிக்கெட் […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.38,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராம் […]
சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு. சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பானது, மரியாதையினிமித்தமான என ஆளுநர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விடியா அரசு தடுமாற்றம் என செல்லூர் ராஜூ விமர்சனம். மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , 2024 மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அதிமுக முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விடியா அரசு தடுமாற்றத்தில் உள்ளது. வருமானவரி, அமலாக்கத்துறை சோதனைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அஞ்சுகிறார். […]