அதிமுகவின் முதல் எம்.பி மாயத்தேவர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து சசிகலா ட்வீட். 1972ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை ஆரம்பித்தார். அதன் பின்னர் நடந்த 1977ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுகவின் முதல் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் மாயத்தேவர். இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த […]
3 வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆறாம் தேதி திருப்பூரில் சிபிஐ-ன் 25வது மாநில மாநாடு தொடங்கியது. இந்த மாநாடு 4 நாட்கள் வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில், மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில், 3 வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பாதுகாப்பு, மாநில உரிமைகள் […]
மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், உயிருக்கு போராடிய இளைஞனை தோளில் தூக்கி சென்ற பெண் காவல் ராஜேஸ்வரி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் கடும் கனமழை பெய்த நிலையில் போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் உதய என்ற மழையில் நனைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் இளைஞரை தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி […]
பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால், புதுசேரி, எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் வட மாவட்டங்களில் கனமழை கொட்டடிதீர்த்து வருகிறது. இன்று கூட நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. தற்போது, வங்க கடலில், புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாம். ஆதலால், பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால், புதுசேரி, எண்ணூர் துறைமுகங்களில் […]
முல்லை பெரியாறு அணை உறுதியுடன் இருக்கிறது. அணை பக்கம் இருக்கும் கேரள எல்லையில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. – மு.க.ஸ்டாலின் கடிதம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் முல்லை பெரியாறு அணை பற்றி எழுதியுள்ளார். அதாவது முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை ஆராய வேண்டும். அது நிரம்பி வருவதால் கேரள கரையோர மக்களுக்கு பாதிப்பு உண்டாகும் அபாயம் இருக்கும் என கேரள முதல்வர் […]
மாயத் தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என ஈபிஸ் அறிக்கை. அதிமுகவின் முதல் எம்.பியான 88 வயதான மாயத்தேவர் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு அதிமுகவினர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மாயத்தேவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக துவக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில், 1973-ஆம் ஆண்டில் கழகம் முதன் […]
அதிமுகவின் முதல் எம்.பியான 88வயதான மாயத்தேவர் இன்று உயிரிழந்துள்ளார். 1972ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை ஆரம்பித்தார். அதன் பின்னர் நடந்த 1977ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுகவின் முதல் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் மாயத்தேவர். இவர் 1980 ஆம் ஆண்டு திமுக சார்பாக திண்டுக்கல்லில் போட்டியிட்டு வென்றுள்ளார் என்பது […]
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரின் 10 ஆண்டு சிறை 3 ஆண்டாக குறைப்பு. குற்ற வழக்குகளின் புலன் விசாரணையில் சாட்சி சொல்ல பொதுமக்கள் யாரும் முன்வருவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுநலனில் ஆர்வமுள்ள சிலர் மட்டுமே சாட்சி சொல்ல வருகின்றனர் என பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் நீதிபதி ஜெயசந்திரன் வேதனை தெரிவித்தார். இதனிடையே, 2006-ல் 16 வயது சிறுமிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 […]
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அநேக இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது . தற்போது வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு […]
அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், இன்று மாலை ஓபிஎஸ் ஆலோசனை. சென்னையில் உள்ள ஓட்டலில் இன்று மாலை 5 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வரும் நிலையில், இன்று மாலை ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபடுகிறார். அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசிக்கிறார் ஓபிஎஸ்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மூலம் கஞ்சா டோர் டெலிவரி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகமாகி கொண்டே போவதால், நாளைய இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை தடுக்க பல்வேரு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால், ஆபரேஷன் கஞ்சா எனும் அதிரடி நடவடிக்கை மூலம் தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அவ்வப்போது கிலோ கணக்கில் கஞ்சா பல்வேறு […]
எந்தவித முயற்சியையும் எடுக்காமல் பொய்களைப் பரப்பி வரும் திமுக என மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு. தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்று பொய்களைப் பரப்பி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உண்மை அறிவோம், Khelo India திட்டத்தின் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாநில அரசின் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் […]
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,80-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஆகஸ்ட் 9) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி. நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு சென்னை , கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், அரசியல் பற்றி விவாதித்ததாகவும், ஆனால் அதுபற்றி இப்பொது கூற முடியாது […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,680 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,680 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.39,040-க்கு விற்பனையாகிறது. […]
ஜூலை 28-ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய […]
சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் தாரேஸ் அகமது உத்தரவிட்டுள்ளார். கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்ப்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி சுதந்திர தினத்தன்று நடத்த வேண்டும். கிராம மக்கள் அனைவரும் […]
டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது. அரசியல் சம்பந்தம் உள்ள ஆசிரியர்கள் பெயரை நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. வருடம் தோறும் தேசிய அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமை ஆசிரியராக, ஆசிரியராக பணியாற்றுபவர்களில் இருந்து சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின விழாவில் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தமிழகத்தில் இருந்தும் […]
மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7-ஆம் தேதி ரூ.1000 வழங்க தமிழக அரசு முடிவு. கடந்த தமிழக சட்டப்பேரவையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு […]
காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து. காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். பி.வி.சிந்து காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில், பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் […]