#JustNow: மாயத்தேவர் மறைவு – இரங்கல் தெரிவித்த ஈபிஎஸ்!

மாயத் தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என ஈபிஸ் அறிக்கை.

மாயத் தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என ஈபிஸ் அறிக்கை.

அதிமுகவின் முதல் எம்.பியான 88 வயதான மாயத்தேவர் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு அதிமுகவினர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மாயத்தேவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அதிமுக துவக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில், 1973-ஆம் ஆண்டில் கழகம் முதன் முதலில் சந்தித்த திண்டுக்கல் நாடாளுமன்ற மக்களவை இடைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற பெருந்தகையர் கே.மாயத் தேவர் அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

முதன் முதலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற கழகத்தின் மூத்த முன்னோடி மாயத் தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றுள்ளார்.

unknown node